இதுதான் புதிய ஃபோர்டு ஃபிகோ கார்: டிசைன் எப்படியிருக்கு?

By Saravana

பிரேசிலில் மார்க்கெட்டில் கா என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய தலைமுறை ஃபோர்டு ஃபிகோ காரின் தயாரிப்பு நிலை மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கான்செப்ட் மாடலுக்கும், தயாரிப்பு நிலை மாடலுக்கும் அதிக வேற்றுமைகள் இல்லை. ஒரு சில மாற்றங்களுடன் இந்த புதிய மாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.


டிசைன்

டிசைன்

கான்செப்ட் மற்றும் தயாரிப்பு நிலை மாடல்களில் ஹெட்லைட் டிசைனில் அதிக வேற்றுமைகள் இல்லை. ஆனால், ஹெட்லைட்டுக்குள் பிரதிபலிப்பு ஆடிகளில் சிறிய மாற்றங்கள் தென்படுகின்றன. கான்செப்ட் மாடலின் கிரில் படுக்கை வாட்டு சட்டங்கள் கொண்டிருந்தது. தயாரிப்பு நிலை மாடலில் தேன்கூட்டு வடிவிலான கிரில் பொருத்தப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய ஃபிகோ காரில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சினுடன் வர இருக்கிறது. இது வாடிக்கையாளர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த எஞ்சின் 85 பிஎச்பி பவரையும், 105 என்எம் டார்க்கையும் அளிக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டதாக இருக்கும்.

டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

புதிய ஃபிகோ காரில் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு வரும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, ஈக்கோஸ்போர்ட் போன்றே மூன்று விதமான எஞ்சின் ஆப்ஷன்களில் புதிய ஃபிகோ கார் கிடைக்கும்.

இந்திய பிரவேசம்

இந்திய பிரவேசம்

அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த புதிய கார் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

டிசைன் எப்படியிருக்கு?

டிசைன் எப்படியிருக்கு?

தற்போது விற்பனையில் இருக்கும் மாடலின் டிசைன் வாடிக்கையாளர்களால் பெரிதும் கவர்ந்த ஒன்று. இந்த நிலையில், முற்றிலும் மாறுபட்ட டிசைனில் வரும் புதிய ஃபோர்டு ஃபிகோ காரின் டிசைன் எப்படியிருக்கிறது? கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: கடைசி இரண்டு ஸ்லைடுகளில் கான்செப்ட் மாடலின் படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, June 10, 2014, 15:10 [IST]
மேலும்... #ford #figo #four wheeler #ஃபிகோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+