எர்டிகாவுக்கு போட்டியாக புதிய எம்பிவியை களமிறக்கும் ஃபோர்டு!
வேகமாக வளர்ந்து வரும் காம்பெக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் ஈக்கோஸ்போர்ட்டை களமிறக்கி புயலை கிளப்பியது ஃபோர்டு. இதைத்தொடர்ந்து, தற்போது எம்பிவி மார்க்கெட்டிலும் சூறாவளியை கிளப்ப திட்டமிட்டு களமிறங்கியுள்ளது.
ஆம், மாருதி எர்டிகா, செவர்லே என்ஜாய் கார்களுக்கு போட்டியை கொடுக்கும் அம்சங்களுடன் புதிய எம்பிவி காரை ஃபோர்டு வடிவமைக்கத் துவங்கியுள்ளது. ஈக்கோஸ்போர்ட் போன்றே டிசைனிலும், வசதிகளிலும், எஞ்சினிலும் மிகச் சிறப்பாக இருக்கும் என்கிறது ஆட்டோமொபைல் வட்டாரங்கள். இந்த புதிய ஃபோர்டு எம்பிவி கார் குறித்த சில கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பிளாட்ஃபார்ம்
டெல்லியில் அறிமுகம் செய்யப்பட்ட ஃபிகோ கான்செப்ட் என்ற புதிய காம்பெக்ட் செடான் காரின் அடிப்படையிலேயே புதிய எம்பிவி கார் வடிவமைக்கப்பட்டு வருகிறதாம்.

காம்பெக்ட் மாடலா?
ஈக்கோஸ்போர்ட் போன்றே சவாலான விலையில் நிலைநிறுத்துவதற்கு ஏதுவாக 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டதாக இருக்கும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

எஞ்சின்
ஈக்கோஸ்போர்ட்டில் இருக்கும் அதே 1.5 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சினுடன் புதிய எம்பிவி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகம்
அடுத்த ஆண்டு ஃபிகோ கான்செப்ட் என்ற புதிய காம்பெக்ட் செடானை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது ஃபோர்டு. எனவே, புதிய எம்பிவி கார் 2016ம் ஆண்டில்தான் வெளிவரும் என்று தெரிகிறது. அப்படி அறிமுகமாகும் பட்சத்தில், மாருதி எர்டிகா, செவர்லே என்ஜாய் தவிர்த்து, ஹோண்டா மொபிலியோ, டட்சன் கோ ப்ளஸ் போன்ற கார்களுடன் போட்டி போட வேண்டியிருக்கும்.


Click it and Unblock the Notifications