மலேசியாவில் ஈக்கோபூஸ்ட் எஞ்சினுடன் ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் கார் அறிமுகம்
மலேசிய மார்க்கெட்டில் ஈக்கோபூஸ்ட் எஞ்சினுடன் புதிய ஃபியஸ்ட்டா காரின் ஹேட்ச்பேக் மாடலை ஃபோர்டு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவில் செடான் மாடலில் விற்பனை செய்யப்படும் ஃபியஸ்ட்டா காரில் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்ட மாடலை ஃபோர்டு விரைவில் அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தற்போது இந்தியாவில் ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவியில் மட்டுமே 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்டதாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில், அடுத்ததாக ஃபியஸ்ட்டா செடான் காரில் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஈக்கோபூஸ்ட் எஞ்சின் கொண்ட ஈக்கோஸ்போர்ட் வாடிக்கையாளர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது.

அதேபோன்று, ஈக்கோபூஸ்ட் எஞ்சினுடன் ஃபியஸ்ட்டா செடான் கார் அறிமுகம் செய்யப்பட்டால் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்புள்ளது. மலேசியாவில் ஈக்கோபூஸ்ட் எஞ்சின் பொருத்தப்பட்ட ஃபியஸ்ட்டா ஹேட்ச்பேக் கார் மாடல் இந்திய மதிப்பில் ரூ.17.29,925 விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், இந்திய மார்க்கெட்டில் ஈக்கோஸ்போர்ட்டின் விலையையொட்டியதாக ஃபியஸ்ட்டா கார் இருக்கும்.


Click it and Unblock the Notifications








