3,000 ஃபோர்டு ஃபியஸ்ட்டா டீசல் கார்களுக்கு ரீகால்!
டீசல் எஞ்சினை வெப்பமூட்டி ஸ்டார்ட் செய்ய உதவும் சாதனத்தை மாற்றித் தருவதற்காக, ஃபோர்டு ஃபியஸ்ட்டா கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையில், டீசல் எஞ்சின்கள் ஸ்டார்ட் ஆவதில் பிரச்னை ஏற்படும். இதனை தவிர்ப்பதற்காக டீசல் எஞ்சினை வெப்பமூட்டுவதற்காக க்ளோ ப்ளக் கன்ட்ரோல் மோடுயூல் என்ற சாதனம் கொடுக்கப்படுகிறது.

இந்தநிலையில், ஃபோர்டு ஃபியஸ்ட்டா டீசல் மாடலில் புதிய க்ளோ ப்ளக் கன்ட்ரோல் மோடுயூல் சாதனத்தை பொருத்தி தருவதற்கு ஃபோர்டு முடிவு செய்துள்ளது. இது வாட்டர்ப்ரூப் வசதி கொண்டது.
இதற்காக, கடந்த 2010ம் ஆண்டு அக்டோபர் முதல் 2011 டிசம்பர் வரை சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்ட 3,072 ஃபியஸ்ட்டா டீசல் செடான் கார்களை ஃபோர்டு திரும்ப அழைக்க உள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என ஃபோர்டு தெரிவித்துள்ளது.
2010 அக்டோபர் முதல் தயாரிக்கப்பட்ட மாடல் என்பதால், தற்போது கிளாசிக் என்ற பெயரில் அழைக்கப்படும் பழைய ஃபியஸ்ட்டா மாடல் திரும்ப அழைக்கப்பட உள்ளதா அல்லது 2011ம் ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய குளோபல் ஃபியஸ்ட்டா கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளதா என்பது குறித்த தகவல் இல்லை.
ஆனால், தற்போது கிளாசிக் என்ற பெயரில் அழைக்கப்படும் பழைய ஃபியஸ்ட்டா கார்கள்தான் திரும்ப அழைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications