புதிய ஃபோர்டு எம்பிவி கார்... பார்த்தவுடனே புருவம் உயருதா?!
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் பாரிஸ் மோட்டார் ஷோவில் உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பல புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கின்றன. கான்செப்ட், தயாரிப்பு நிலை மாடல்கள், ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் என பல விதங்களில் புதிய மாடல்கள் காட்சி தர இருக்கின்றன. அதில், இந்தியாவுக்கு வர இருக்கும், அல்லது வருவதற்கு அதிக வாய்ப்புள்ள மாடல்களை தேர்வு செய்து அந்த செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தளம் வழங்கி வருகிறது.
அந்த வகையில், பாரிஸ் மோட்டார் ஷோவில் அறிமுகமாக இருக்கும் புதிய தலைமுறை ஃபோர்டு எஸ்- மேக்ஸ் எம்பிவி காரின் டிசைன், தொழில்நுட்பம் போன்றவை எமது புருவத்தை உயர்த்தியுள்ளன. ஏனெனில், இந்தியாவில் கொண்டு வருவதற்கான அனைத்து அம்சங்களையும் இந்த புதிய எம்பிவி கார் கொண்டுள்ளது. இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட்டால், அது ஹோண்டா மொபிலியோ, மாருதி எர்டிகா போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியை தரும். என்ன ஆவல் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டதா. ஸ்லைடருக்கு வாருங்கள் கூடுதல் தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம்.

சிறந்த கார் விருது
ஃபோர்டு எஸ்- மேக்ஸ் என்ற பெயர் கொண்ட இந்த புதிய எம்பிவி காரை ஸ்போர்ட்ஸ் ஆக்டிவிட்டி வெகிக்கிள் என்ற ரகத்தில் அழைக்கிறது ஃபோர்டு. கடந்த 2007ம் ஆண்டு ஐரோப்பாவின் சிறந்த காருக்கான விருதை வென்ற மாடல் இது.

எஞ்சின்
ஐரோப்பிய மாடலில் 2.0 லிட்டர் டிடிசிஐ டீசல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் ஈக்கோபூஸ்ட் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதேவேளை, இந்தியாவிற்கு என்று பரிசீலிக்கும்போது குறைவான சிசி கொண்ட எஞ்சின்களை பொருத்த வாய்ப்புள்ளது.

இருக்கை அமைப்பு
இதுவும் 7 சீட்டர் எம்பிவி மாடல்தான். மேலும், சிறந்த இடவசதியுடன் வருவதால் காம்பேக்ட் மாடலில் ஹோண்டா மொபிலியோவுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று கூறலாம்.

டிசைன்
முன்புறத்தில் ஃபியஸ்ட்டா போன்றே அஸ்டன் மார்ட்டின் ஸ்டைல் கிரில், பக்கவாட்டில் பெரிய அலாய் வீல்கள், கண்ணை கவரும் பாடி லைன்கள் என அழகாக இருக்கிறது. டியூவல் எக்ஸ்சாஸ்ட் பைப்புகள், எல்இடி டெயில் லைட்டுகளும், அதன் டிசைனும் சொகுசு கார் போன்ற தோற்றத்தை கொடுக்கிறது.

இன்டிரியர்
ஃபோர்டு கார்களுக்கே உரித்தான மிக அழகிய டிசைனை கொண்டுள்ளது. இன்டிரியர் கருப்பு நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது. கிளைமேட் கன்ட்ரோல், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவையும் குறிப்பிடத்தக்க வசதிகள்.

விற்பனை
ஐரோப்பிய மார்க்கெட்டில் முதலில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய தலைமுறை ஃபோர்டு எஸ்- மேக்ஸ் எம்பிவி கார் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால், ஈக்கோஸ்போர்ட் போன்றே மிகச்சிறந்த எம்பிவி கார் மாடலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








