இலகு எடையுடன் புதிய காரை அறிமுகப்படுத்திய ஃபோர்டு!
மிக இலகுவான எடையுடன் புதிய கான்செப்ட் காரை ஃபோர்டு அறிமுகம் செய்துள்ளது. ஃபோர்டு ஃப்யூஷன் மாடலில் இந்த இலகு எடையுடைய புதிய மாடல் வெளியிடப்பட்டுள்ளது.
வெறும் 1,199 கிலோ மட்டுமே எடை கொண்ட இந்த புதிய ஃப்யூஷன் செடான் கான்செப்ட் தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட 363 கிலோ வரை எடை குறைவானது.

ஐ- போனில் பயன்டுத்தப்படும் கொரில்லா கிளாஸ் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இருக்கை, சக்கரங்கள் மற்றும் எஞ்சினில் கார்பன் ஃபைபர் பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சஸ்பென்ஷன் ஸ்பிரிங்குகள் ஃபைபர் கிளாஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. அலுமினியம் பாடி பேனல்கள், இலகு எடை கண்ணாடிகள் மூலம் எடை வெகுவாக குறைக்கப்பட்டிருக்கிறது.
எடை குறைக்கப்பட்டிருப்பதால் 15 சதவீதம் கூடுதல் எரிபொருள் சிக்கனம் கொண்டதாக இருக்கும். இலகு எடையுடன் தயாரிக்கப்படும் அடுத்த தலைமுறை கார்களுக்கு இது முன்னோடியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








