புதிய ஃபோர்டு ஃபியஸ்ட்டா அறிமுகம் - விபரம்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஃபோர்டு ஃபியஸ்ட்டா கார் அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய ஹோண்டா சிட்டி, ஹூண்டாய் வெர்னா கார்களுடன் புதிய ஃபியஸ்ட்டா போட்டி போடும்.

டிசைன்
அஸ்டன் மார்ட்டின் கார்கள் போன்ற முகப்பு கிரில், புதிய ஹெட்லைட், பனி விளக்குகள், பானட் என வடிவமைப்பு கொண்ட புதிய ஃபியஸ்ட்டா இந்திய வாடிக்கையாளர்களை கவரும்.

எஞ்சின்
தற்போதைய மாடலில் இருக்கும் அதே எஞ்சின் ஆப்ஷன்களுடன் புதிய ஃபியஸ்ட்டா வரும். 107 பிஎச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் பெட்ரோல் மாடல் மற்றும் 89 பிஎச்பி பவர் கொண்ட 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்களுடன் வருகிறது.

ஈக்கோபூஸ்ட் எஞ்சின்
ஈக்கோஸ்போர்ட்டில் பொருத்தப்பட்டிருக்கும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் எஞ்சினுடனும் இந்த புதிய ஃபியஸ்ட்டா வர இருக்கிறது.

டிரான்ஸ்மிஷன்
பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடல்களில் கிடைக்கும். டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் மட்டும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








