இன்றுமுதல் நேட்ஜியோ சேனலில் 'சூப்பர்கார்ஸ்'... காணத்தவறாதீர்!
நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலில் ஒளிப்பரப்பான சூப்பர்கார்ஸ் நிகழ்ச்சி கார் பிரியர்களின் மனதை வெகுவாக கவர்ந்த ஒன்று. இந்தநிலையில், சூப்பர்கார்ஸ் நிகழ்ச்சியின் 4ம் பாகம் இன்றுமுதல் நேஷனல் ஜியோகிராஃபிக் சேனலில் ஒளிப்பரப்பாக உள்ளது.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிப்பரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நடிகையும், பிரபல மாடல் அழகியுமான லிசா ஹேடன் கவர்ச்சியூட்ட இருக்கிறார்.

பிஎம்டபிள்யூ எம்3 மற்றும் லெக்சஸ் ஐஎஸ்எஃப், போர்ஷே மற்றும் நிசான் ஜிடி-ஆர், ஃபெராரி எஃப்430 காருக்கும், ஃபெராரி கலிஃபோர்னியா காருக்கும் இடையிலான யுத்தங்களை கண்டு ரசிக்கும் வாய்ப்பு இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்கு கிடைக்க இருக்கிறது.
முந்தைய பாகங்களை விட மிக சிறப்பானதாக இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என என்ஜிசி மற்றும் ஃபாக்ஸ் இன்டர்நேஷனல் சேனல்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் தேபர்பிதா பானர்ஜி கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications








