இந்தியாவில் விற்பனையாகும் கார்களுக்கு கிராஷ் டெஸ்ட் கட்டாயம்: மத்திய அரசு முடிவு

அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார்களுக்கும் கிராஷ் டெஸ்ட் சோதனை கட்டாயமாக்கப்பட உள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சில முன்னணி கார் மாடல்களை குளோபல் என்சிஏபி என்ற அமைப்பு முன்புற வலிமையை சோதிக்கும் வகையில் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தியது. அதில், பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

Crash Test

இந்தியாவில் விற்பனையாகும் பல கார் மாடல்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்கள் கூட இல்லாமல் தயாரிக்கப்படுவது இந்த சோதனைகள் மூலம் அம்பலமாகியுள்ளது. இது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. கார்களில் பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் துவங்கியுள்ளன.

தள்ளுபடி விலையில் மெட்ஸிலர் டயர்கள்!

இதையடுத்து, விழித்துக் கொண்ட மத்திய அரசு, அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் விற்பனையாகும் கார்களுக்கு கிராஷ் டெஸ்ட் சோதனையை கட்டாயமாக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்காக, பாரத் நியூ வெகிக்கிள் சேஃப்டி அசெஸ்மென்ட் புரோக்ராம்((BNVSAP)) என்ற பிரத்யேக அமைப்பும் உருவாக்கப்பட உள்ளது.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கான பரிசோதனை கூடங்கள் அமைக்கப்பட்டு, கிராஷ் டெஸ்ட் செய்வதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட உள்ளது. இதிலிருந்து, அடுத்த 6 மாதங்களுக்குள் கார் நிறுவனங்கள் கிராஷ் டெஸ்ட் செய்வதற்கான வழிமுறைகளை பின்பற்றி கார்களை தயாரிக்க வேண்டும்," என்று மத்திய சாலைப் போக்குவரத்து துறை செயலர் விஜய் சிப்பர் தெரிவித்துள்ளார்.

மணிக்கு 56 கிமீ வேகத்தில் காரை மோதி கிராஷ் டெஸ்ட் சோதனை நடத்தப்படும். கிராஷ் டெஸ்ட் நடைமுறை அமலுக்கு வந்த பின்னர் , இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் ஏதாவது ஒன்றை எடுத்து கிராஷ் டெஸ்ட் சோதனை நடத்தப்படும். அந்த கார் மாடல் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்படுகின்றதா என்பதும் ஆய்வு செய்யப்படும்.

இந்தியாவிலிருந்து தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிநாடுகளுக்கு கார்களை தயாரித்து அனுப்பும் நிறுவனங்கள், உள்நாட்டு வாடிக்கையாளர்களுக்கு, ஏன் தகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரித்து கொடுக்கவில்லை? என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சக செயலாளர் வினவியுள்ளார்.

அதையேத்தான் நாங்களும் கேட்கிறோம்!

More from DriveSpark

Article Published On: Wednesday, November 5, 2014, 16:32 [IST]
English summary
The government of India has finally woken up to the fact that cars made in India are not safe. All cars should undergo a frontal crash test from October 2015 onwards.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+