3 புதிய சாட்டிலைட் நேவிகேஷன்களை அறிமுகப்படுத்திய கார்மின்!

By Saravana

இந்தியாவில் கார்களுக்கு பயன்படும் 3 புதிய சாட்டிலைட் நேவிகேஷன் கருவிகளை கார்மின் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

வசதிகேற்ப எந்த கோணத்திலும் பொருத்திக் கொள்ளும் துல்லியமான திரை, வாய் மொழி தகவல் வசதி மற்றும் இலவசமாக தகவல்களை அவ்வப்போது அப்டேட் செய்துகொள்வதற்கான வசதிகளுடன் இந்த புதிய சாட்டிலைட் நேவிகேஷன் கருவிகள் வந்துள்ளன.

கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் காணலாம்.

மூன்று மாடல்கள்

மூன்று மாடல்கள்

நூவி 55எல்எம், நூவி 65எல்எம், நூவி 2567எல்எம் ஆகிய மூன்று மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளன. நூவி 55எல்எம் கருவி ரூ10,990 விலையிலும், , நூவி 65எல்எம் கருவி ரூ.14,990 விலையிலும், நூவி 2567எல்எம் கருவி ரூ.17,990 விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.

கூடுதல் தகவல்கள்

கூடுதல் தகவல்கள்

சுற்றுலா மற்றும் பயணங்களை முன்கூட்டியே சிறப்பாக திட்டமிடும் வகையில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தப் இடங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் பற்றிய கூடுதல் தகவல்களை இந்த புதிய வழிகாட்டு சாதனங்கள் மூலம் பெறலாம்.

நூவி 55 எல்எம்

நூவி 55 எல்எம்

நூவி 55எல்எம் என்ற மாடலில் 12.7 செமீ திரை கொண்டது. எதிரில் வரும் சாலை சந்திப்புகள் குறித்த விபரத்தையும், அதில் எந்த புறம் திரும்ப வேண்டும் என்பதையும் முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி இருக்கிறது. அருகிலுள்ள பெட்ரோல் நிலையங்கல், ஓட்டல்கள், வங்கி ஏடிஎம்.,கள் போன்ற தகவல்களை இந்த கருவி மூலம் பெறலாம்.

நூவி 65எல்எம்

நூவி 65எல்எம்

முந்தைய மாடலைவிட சிறிது பெரிய திரை கொண்டது. இந்த மாடல் 15.24 செமீ திரை கொண்டது. டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், வழித்தட எச்சரிக்கை வசதி, நெடுஞ்சாலைகளில் இருக்கும் வழிகள், சந்திப்புகள் பற்றிய விபரங்களை வழங்கும். ஆங்கிலம், இந்தி மொழிகளில் வாய்மொழியாக தகவல்களை பெறலாம்.

 நூவி 2567எல்எம்

நூவி 2567எல்எம்

இந்த கருவியில் முகவரியை துல்லியமாக தெரிந்துகொள்ளலாம். வானிலை தகவல்கள், ஸ்மார்ட்போனை ப்ளூடூத் மூலம் இணைத்துக் கொள்ளும் வசதிகளை கொண்டுள்ளது. இதில், போக்குவரத்து நெரிசல் பற்றிய தகவல்களை உடனுக்குடன் பெறும் வசதியும் உள்ளது.

பிராந்திய மொழிகளிலும்...

பிராந்திய மொழிகளிலும்...

இந்த கருவிகளில் ஆங்கிலம், இந்தி தவிர 9 இந்திய மொழிகளில் வாய்மொழியாக தகவல்களை பெறலாம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 28, 2014, 12:11 [IST]
English summary
The world leader in satellite navigation, Garmin, has added three new models to their line up for the Indian customers - the nüvi 55LM, nüvi 65LM, and nüvi 2567LM. The three models are priced at INR 10,990, INR 14,990, and INR 17,990 respectively.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+