இந்தியாலிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு செவர்லே பீட் கார் ஏற்றுமதி!

By Saravana

இந்தியாவிலிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு செவர்லே பீட் கார் ஏற்றுமதியை ஜெனரல் மோட்டார்ஸ் துவங்க இருக்கிறது. நடப்பு ஆண்டின் பிற்பாதியிலிருந்து இந்த ஏற்றுமதி துவங்கப்பட உள்ளது.

இந்தியாவில் 18 ஆண்டுகளாக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் தற்போது புதிய ஏற்றுமதி கொள்கைகளை வகுத்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலிக்கு பீட் காரை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

Chevy Beat

வரும் அக்டோபரில் 2,000 முதல் 2,500 செவர்லே பீட் கார்களை முதல் கட்டமாக ஏற்றுமதி செய்ய உள்ளது. இதைத்தொடர்ந்து, மெக்சிகோ, பெரு, மத்திய அமெரிக்க நாடுகள் மற்றும் கரிபீயன் நாடுகளுக்கு அடுத்த ஆண்டு முதல் பீட் காரை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது.

மஹாராஷ்டிர மாநிலம், தலேகானில் உள்ள ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் 18 முதல் 20 சதவீத கார்களை ஏற்றுமதி செய்ய அந்த நிறுவனம் உத்தேசித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு 30,000 பீட் கார்களை லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, May 24, 2014, 13:06 [IST]
English summary
GM India has now put in place an integrated export strategy, a first in its 18 years in India, for Beat, its small car. ET learns General Motors India plans to kick-start export of Beat small car to Latin America from the second half of 2014. 
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+