ஜனவரி 1 முதல் செவர்லே கார்களின் விலை உயருகிறது!
வரும் ஜனவரி 1ந் தேதி முதல் செவர்லே கார்களின் விலை உயர்த்தப்படுகிறது.
அதிகரித்திருக்கும் உற்பத்தி செலவீனத்தை மனதில் கொண்டு இந்த விலை உயர்வு முடிவை எடுத்திருப்பதாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பின் மூலம் செவர்லே பிராண்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து கார் மாடல்களின் விலையும் ஒரு சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது. மாடலுக்கு தகுந்தாற்போல் குறைந்தபட்சம் ரூ.5,000 முதல் ரூ.20,000 வரை விலை உயர்வு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார் விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வரும் நிலையில், ஜெனரல் மோட்டார்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








