இரவில் விபத்துக்களை தடுக்கும் 'ஒளிரும்' நெடுஞ்சாலை!

By Saravana

இரவு நேர இருளில் சாலை தெளிவாக தெரியாமல் ஏராளமான விபத்துக்கள் நடக்கின்றன. குறிப்பாக, நெடுஞ்சாலைகளில் வளைவில் திரும்பும்போது, சாலையின் பக்கவாட்டை கணித்து ஓட்டுவது சவாலாக இருக்கிறது. இதனை தவிர்க்கும் விதமாக புதிய முயற்சியை நெதர்லாந்து நெடுஞ்சாலை துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

என்329 என்ற நெதர்லாந்து நெடுஞ்சாலையின் சாலையின் இருபுறங்களிலும் ஒளிரும் தன்மை கொண்ட பெயிண்ட்டால் கோடுகள் போட்டுள்ளனர். இதன்மூலம், இரவில் வாகன ஓட்டிகள் சாலையை தெளிவாக உணர்ந்து கொண்டு வாகனத்தை செலுத்த முடியும்.


சூரிய மின்சக்தி

சூரிய மின்சக்தி

இந்த பெயிண்ட் சூரியமின்சக்தி மூலம் தானாகவே சார்ஜ் செய்துகொள்ளும்.விசேஷமான இந்த பெயிண்ட் இரவில் 10 மணிநேரம் வரை விடாது ஒளிரும்.

மின்சார மிச்சம்

மின்சார மிச்சம்

இந்த விசேஷ பெயிண்ட்டுக்கு மின்சாரம் தேவையில்லை என்பது குறிப்பிட்டு கூறப்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகளுக்கு சாலை மிக தெளிவாக தெரியும் என்பதால் விபத்துக்கள் வெகுவாக குறையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 சோதனை முறை

சோதனை முறை

சோதனை முறையில் இந்த சாலைகளில் ஒளிரும் பெயிண்ட் கோடுகள் போடப்பட்டுள்ளன. இந்த புதிய முறை வெற்றிகரமாக அமைந்தால், பிற நெடுஞ்சாலைகளிலும் இந்த விசேஷ பெயிண்ட் கோடுகளை போடுவதற்கு நெதர்லாந்து நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது.

 மற்றொரு திட்டம்

மற்றொரு திட்டம்

இதுபோன்று பல புதுமையான திட்டங்கள் நெதர்லாந்து நெடுஞ்சாலை வசம் உள்ளது. அதில், சாலையின் வெப்பநிலையை காட்டும் வகையில் ஒரு விசேஷ பெயிண்ட்டை பூசவும் திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம், சாலையின் தட்டவெப்ப நிலையை தெரிந்துகொண்டு அதற்கு ஏற்ப ஓட்ட முடியும்.

மின்சார சார்ஜ் சாலை

மின்சார சார்ஜ் சாலை

மேலும், சாலையில் செல்லும்போது எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் செய்யும் கட்டமைப்பு கொண்ட சாலைகளை அமைக்கும் திட்டமும் சோதனையில் இருந்து வருகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, October 24, 2014, 14:54 [IST]
English summary
Their solution–glow in the dark paint. As a part of the Smart Highway project, the N329 in Oss was the first trial. The glowing lines are aimed at increasing night visibility and safety.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+