டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகும் மேம்படுத்தப்பட்ட செவர்லே பீட்!
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவிற்கான திட்டங்கள் குறித்து ஜெனரல் மோட்டார்ஸ் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், ஒரு சில சர்வதேச மாடல்களை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வைக்க ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
கமாரோ, கார்வெட் மற்றும் மேம்படுத்தப்பட்ட செவர்லே பீட் காரை டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஜெனரல் மோட்டார்ஸ் பார்வைக்கு வைக்க உள்ளதாக தெரிகிறது.

இதில், மேம்படுத்தப்பட்ட செவர்லே பீட் கார் இந்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டு விற்பனைக்கு வந்த இந்த காரில் வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சில மாற்றங்களை செய்துள்ளது ஜெனரல் மோட்டார்ஸ்.
கூடுதல் அம்சங்களுடன் மெருகேறிய கவர்ச்சியுடன் இந்திய வாடிக்கையாளர்களை வசியம் செய்ய இந்த மேம்படுத்தப்பட்ட பீட் கார் மாடல் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் தரிசனம் தரவுள்ளது.


Click it and Unblock the Notifications








