மொபைல்போன், பர்சை பாதுகாக்கும் காருக்கான பெட்டகம்: கோத்ரேஜ் அறிமுகம்

By Saravana

நிறுத்தியிருக்கும் கார்களில் மொபைல்போன், பர்ஸ் போன்றவற்றை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. காருக்குள் வைத்து விட்டுச் செல்லும்போது அதில் விலை மதிப்புமிக்க பொருட்களை காணாமல் போவதோடு, கிரெடிட் கார்டு போன்றவையும் திருடி மோசடி செய்யப்படுகின்றன.

இதனால், பலர் தேவையற்ற அலைச்சர், வீண் சிரமங்களை சுமக்கும் நிலைக்கு தள்ளப்படுவதோடு கடும் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். இதனை தவிர்க்கும் விதத்தில் பாதுகாப்பு கருவிகள் மற்றும் பெட்டகங்களை வழங்குவதில் முன்னிலை வகிக்கும் கோஜ்ரேஜ் நிறுவனம் கார்களுக்கான புதிய பாதுகாப்பு பெட்டகத்தை அறிமுகம் செய்துள்ளது.


அடக்கமான சைஸ்

அடக்கமான சைஸ்

முதல்முறையாக இதுபோன்ற கார் பெட்டகத்தை கோத்ரேஜ் ஸ்மார்ட் சொலியூஷன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மோட்டோர்மேட் என்ற பெயரில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த பெட்டகம் மிகவும் அடக்கமாக டிசைன் செய்யப்பட்டிருப்பதால் எடுத்துச் செல்வதும், காரில் எந்த இடத்திலும் மறைத்து வைப்பதற்கும் ஏதுவானது. அலுமினிய பாடி கொடுக்கப்பட்டுள்ளதால் கீறல்கள் விழுந்தாலும் தெரியாது.

சார்ஜ் வசதி

சார்ஜ் வசதி

இந்த பெட்டகத்தில் பர்ஸ், மொபைல்போன், கேமரா மற்றும் கிரெடிட் கார்டுகளை வைத்துக் கொள்ளலாம். மேலும், பெட்டகத்துக்குள் வைக்கப்படும் கேமரா மற்றும் மொபைல்போன்களை சார்ஜ் செய்வதற்கு ஏதுவாக வயரும் கொடுக்கப்பட்டுள்ளது.

கிடைக்குமிடங்கள்

கிடைக்குமிடங்கள்

கோத்ரேஜ் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படும் கடைகள், வணிக நிறுவனங்களிலும், ஹோம்ஷாப் 18, அமேசான், ஸ்நாப்டீல், ஷாப்க்ளூஸ் போன்ற ஆன்லைன் விற்பனை தளங்களிலும் இந்த மோட்டோர்மேட் பெட்டகம் கிடைக்கிறது.

விலை

விலை

ரூ.2,499 விலையில் இந்த புதிய மோட்டார்மேட் பெட்டகம் கிடைக்கிறது. இது கார் வைத்திருப்பவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்று கோத்ரேஜ் தெரிவித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, May 22, 2014, 9:34 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+