கூகுளில் இணைந்த ஃபோர்டு முன்னாள் தலைவர் ஆலன் முலாலி!!

ஃபோர்டு நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஆலன் முலாலி கூகுள் நிறுவனத்தின் வாரிய இயக்குனர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 8ந் தேதி முதல் அவர் கூகுள் நிறுவனத்தில் பொறுப்பேற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டு நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஆலன் முலாலி. போயிங் நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருந்த அவர் கடந்த 2006ம் ஆண்டு ஃபோர்டு நிறுவனத்தின் சிஇஓ.,வாக பொறுப்பேற்றார்.

Ford CEO

கடந்த 2008ம் ஆண்டில் உலக பொருளாதார மந்தநிலையின்போது திறம்பட செயல்பட்டு ஃபோர்டு நிறுவனத்தின் வர்த்தகத்தை நிலையாக கொண்டு சென்றார். மேலும், அன்றைய சூழ்நிலையில், ஜெனரல் மோட்டார்ஸ், கிறைஸ்லர் உள்ளிட்ட நிறுவனங்கள் சரிவில் சிக்கிய அமெரிக்க அரசின் நிதி உதவி செய்ததன் மூலம் மீண்டன. ஆனால், ஃபோர்டு நிறுவனம் அரசின் நிதியுதவியை பெறவில்லை.

மேலும், நாசா, வாஷிங்டன் கவுன்சிலிலும் பொறுப்புகளை வகித்தவர். இந்த நிலையில், கடந்த 1ந் தேதி ஃபோர்டு நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்ற ஆலன் முலாலியை கூகுள் இழுத்துள்ளது. அந்த நிறுவனத்தின் வாரிய குழுவில் 11வது இயக்குனராக ஆலன் முலாலி இணைந்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தணிக்கை பிரிவுகளை ஆலன் முலாலி கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தானியங்கி கார்களை வடிவமைப்பில் தீவிரம் காட்டி வரும் கூகுள் வாகன துறையில் பழுத்த அனுபவம் கொண்ட ஆலன் முலாலியின் வழிகாட்டுதல்களை பெறுவதற்கு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, July 17, 2014, 16:46 [IST]
English summary
Ex-President and CEO of Ford, Alan mulally has served for the American automobile manufacturer for a long time. Google now confirms that Alan mulally will join their board of Directors. He will be working with the Audit Committee and has begun work on 8th of July, 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+