காருக்காக பிரத்யேக ஆன்ட்ராய்டு சாஃப்ட்வேர்: கூகுள் தீவிரம்!
காரின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கான நேரடி ஆன்ட்ராய்டு சாஃப்ட்வேரை கூகுள் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
பொழுதுபோக்கு, ஆன்லைன் ரேடியோ, நேவிகேஷன் உள்ளிட்ட காருக்கான நவீன தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்துவதில், ஆப்பிள், கூகுள் ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஆப்பிள் கார் ப்ளே சிஸ்டத்திற்கு போட்டியாக காருக்கான புதிய ஆன்ட்ராய்டு சாஃப்ட்வேரை உருவாக்கும் பணிகளில் கூகுள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கடந்த ஜனவரியில் கார்களுக்கான பிரத்யேக ஆன்ட்ராய்டு சாஃப்ட்வேரை கூகுள் அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் அப்ளிகேஷனாக பயன்படுத்திக் கொண்டு காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைத்து வசதிகளை பெறும் வகையில், இந்த சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டது. அடுத்த ஆண்டு இந்த புதிய சாஃப்ட்வேரை கூகுள் வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இந்த நிலையில், ஸ்மார்ட்போன் இல்லாமல், கார் இன்ஃபோடெயின்மென்ட் சாதனத்திலேயே நேரடியாக பதிவேற்றம் செய்துகொள்ளக்கூடிய புதிய ஆன்ட்ராய்டு சாஃப்ட்வேரை கூகுள் நிறுவனம் உருவாக்கி வருகிறது. ஒவ்வொரு முறையும் கார் ஸ்டார்ட் ஆகும்போது கூகுள் ஆன்ட்ராய்டு சாஃப்ட்வேர் மூலம் உடனடியாக தகவல்களை பெறும் வகையில், இந்த சாஃப்ட்வேர் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
ஸ்மார்ட்போன் துணையின்றி தகவல்களை உடனுக்குடன், நேரடியாக பெறும் வகையில், ஆன்ட்ராய்டு எம் அடிப்படையில் இந்த சாஃப்ட்வேர் உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய சாஃப்ட்வேர் குறித்து முழுமையானத் தகவல்கள் தெரியவில்லை. வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் புதிய தொழில்நுட்பங்களுக்கான கண்காட்சியில், இந்த புதிய கார் ஆன்ட்ராய்டு சாஃப்ட்வேர் குறித்த தகவல்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications








