கேமராவால் சூமாக்கர் தலையில் பலத்த காயம்... தவிப்பில் கோப்ரோ!
ஃபார்முலா-1 முன்னாள் சாம்பியன் மைக்கேல் சூமாக்கருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதற்கு, ஹெல்மெட்டில் பொருத்தப்பட்டிருந்த கோப்ரோ கேமராதான் காரணம் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு விளையாட்டின்போது தவறிவிழுந்த சூமாக்கருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் பல மாதங்கள் கோமாவில் இருந்தார். இந்தநிலையில், சுயநினைவு திரும்பியதையடுத்து, வீட்டிலேயே தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில், சூமாக்கர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதற்கு அவர் அணிந்திருந்த ஹெல்மெட்டில் இருந்த கோப்ரோ கேமராதான் காரணம் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. சூமாக்கரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதற்கு, கோப்ரோ கேமராதான் காரணம் என்று ஃபார்முலா ஒன் கார் பந்தய வர்ணனையாளர் ஜீன் லூயிஸ் மான்செட் கூறியுள்ளார்.
இந்த தகவல் வைரலாக பரவியதையடுத்து, அமெரிக்காவை சேர்ந்த கோப்ரோ கேமரா நிறுவனத்தின் விற்பனை தடாலடியாக சரிந்துவிட்டது. இதுகுறித்து உண்மையான தகவல்களை பெற முயற்சித்து வருவதாக கோப்ரோ நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இது உண்மையானால் கோப்ரோ கேமார நிறுவனத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என கருதப்படுகிறது. சாகச விளையாட்டுகள், கார் பந்தயங்கள் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுத் துறைகளில் கோப்ரோ கேமரா பயன்படுத்தப்படுகிறது. அளவில் மிகச்சிறியதாகவும், ஹைடெபினிஷன் எனப்படும் உயர்தரத்திலான வீடியோக்களை எடுப்பதற்கு இந்த கேமராவை அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications








