டட்சன் கோ காரின் விதவிதமான 'கஸ்டம்' மாடல்கள்: முழு விபரம்!
சவாலான விலையில் சிறப்பான அம்சங்களுடன் புதிய டட்சன் கோ கார் விற்பனைக்கு வந்து போட்டியாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. மேலும், டட்சன் கோ காரின் அழகை கூட்டுவதற்கும், வசதிகளை கூட்டிக் கொள்வதற்கும் ஏதுவாக ரூ.484 முதல் ரூ.7,920 வரையிலான விலையில் கூடுதல் ஆக்சஸெரீஸ்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், டட்சன் கோ காரின் சிறப்பு ஆக்சஸெரீஸ்கள் அடங்கிய கஸ்டம் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கோ மகளிர் எடிசன், குடும்பத்துக்கான மாடல் என்ற விதவிதமான மாடல்களில் இந்த புதிய கஸ்டம் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. என்ன இப்போதே ஆர்வமாகிவிட்டீர்களா? ஸ்லைடருக்கு வாருங்கள் முழுத் தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

மகளிர் எடிசன்
இந்த கஸ்டமைஸ் மாடலில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், ரிவர்ஸ் கேமரா போன்றவை நிரந்தரமாக இடம்பெற்றிருக்கிறது. திரைசீலைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. பனி விளக்குகள், ரூஃப் ரெயில்கள், பாடி கிராஃபிக்ஸ், செக்யூரிட்டி சிஸ்டம், பார்சல் டிரே, போன்றவையும் இருக்கும்.

ஃபேமிலி பேக்கேஜ்- 1
லெதர் சீட் கவர்கள், பார்சல் டிரே, திரைசீலைகள், செக்யூரிட்டி சிஸ்டம், பிவிசி லக்கேஜ் மேட், தரைவிரிப்புகள் ஆகியவை இருக்கும்.

ஃபேமிலி பேக்கேஜ்- 2
பனி விளக்குகள், டோர் வைசர்கள், ஸ்டீயரிங் வீல் கவர், தரைவிரிப்புகள், லெதர் சீட் கவர், பார்சல் டிரே, செக்யூரிட்டி சிஸ்டம் உள்ளிட்டவை இருக்கும்.

ஸ்போர்ட்டி பேக்கேஜ்
ரியர் ஸ்பாய்லர், ரூஃப் ரெயில்கள், பனி விளக்குகள், டோர் வைசர்கள், அலாய் வீல்கள், எக்சாஸ்ட் பினிஷர், பாடி கிராஃபிக்ஸ் ஸ்டிக்கர், எல்இடி விளக்குகளுடன் கூடிய ஸ்கஃப் பிளேட், கியர் லிவருக்கு லெதர் கவர், ஸ்டீயரிங் வீலுக்கான கவர், பாடி சைடு மோல்டிங் உள்ளிட்ட ஆக்சஸெரீஸ்கள் இடம்பெற்றிருக்கும்.

ட்ரென்டி பேக்கேஜ்
இந்த மாடலில் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ஆன்டெனா, பார்சல் டிரே, ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி கொண்ட ஆடியோ சிஸ்டம், ரியர் ஸ்பீக்கர் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

எசென்சியல்- 1
ஸ்ப்ளாஷ் கார்டு, லக்கேஜ் மேட், ஃபேப்ரிக் சீட் கவர், ஸ்டீயரிங் வீல் கவர், பாடி கவர், பிவிசி மேட், வீல் கவர் ஆகியவை கிடைக்கும்.

எசென்சியல்- 2
ரியர் பார்சல் டிரே, தரைவிரிப்பு, ரிமோட் லாக், ஃபேப்ரிக் சீட் கவர், ஸ்டீயரிங் வீல் கவர் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.


Click it and Unblock the Notifications








