உலகின் அதிவேக ஹென்னிஸி வெனோம் காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்று தீர்ந்தது!
உலகின் அதிவேக கார் என்ற சாதனையை பதிவு செய்திருக்கும் ஹென்னிஸி வெனோம் ஜிடி காரின் ஸ்பெஷல் எடிசன் மாடல்கள் விற்று தீர்ந்தன. கடந்த மாதம் நாசாவின் கென்னடி ஓடுதளத்தில் ஹென்னிஸி வெனோம் ஜிடி கார் மணிக்கு 435.311 கிமீ வேகத்தை தொட்டு புதிய உலக சாதனை படைத்தது.
ஆனால், இந்த உலக சாதனையை சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்பு இதுவரை அங்கீகரித்து அறிவிப்பு வெளியிடவில்லை. சில விதிமுறைகள் காரணமாக இந்த சாதனை அங்கீகரிக்கப்படவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், ஹென்னிஸி வெனோம் ஜிடி கார் உலகின் அதிவேக சாதனையை பதிவு செய்ததை கொண்டாடும் விதமாக 3 ஸ்பெஷல் எடிசன் மாடல்களை ஹென்னிஸி வெளியிட்டிருக்கிறது. அந்த மூன்று காரும் விற்று தீர்ந்துவிட்டதாம்.

விலை
ஸ்பெஷல் எடிசன் மாடலாக மொத்தம் 3 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன. ஒரு காரின் விலை 1.25 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பு
இந்த மூன்று கார்களையும் அமெரிக்க வாடிக்கையாளர்கள் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர, மொத்தமாக 29 ஹென்னிஸி வெனோம் ஜிடி கார்கள் தயாரிக்கப்பட உள்ளதும், அதில் 11 கார்கள் ஏற்கனவே டெலிவிரி கொடுக்கப்பட்டுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்பெஷல் எடிசன் சிறப்பு
ஸ்பெஷல் எடிசன் மாடல் காரின் வண்ணத்தில் மட்டுமே மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க தேசியக் கொடியின் வெள்ளை, நீலம், சிவப்பு வண்ணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, வெள்ளை நிற காரின் மத்தியில் நெடுகிலும் நீலம், சிவப்பு வண்ணக் கோடுகள் போடப்பட்டுள்ளன.
(முதல் ஸ்லைடில் கொடுக்கப்பட்டுள்ள கார்)

எஞ்சின்
இந்த காரில் 7.0 லிட்டர் வி8 ட்வின் டர்போசார்ஜ்டு எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த எஞ்சின் 1,244 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

செயல்திறன்
வெறும் 1,244 கிலோ எடை கொண்ட இந்த கார் 0- 300 கிமீ வேகத்தை எட்டுவதற்கு வெறும் 13.63 வினாடிகளே எடுத்துக் கொள்ளும்.


Click it and Unblock the Notifications








