இந்திய கார் மார்க்கெட்டில் 3வது இடத்தை பிடித்தது ஹோண்டா கார் நிறுவனம்!!
இந்திய கார் மார்க்கெட்டில் 3ம் இடத்தில் இருந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை ஹோண்டா கார் நிறுவனம் பெற்றிருக்கிறது.
கடந்த 1995ம் ஆண்டு இந்திய கார் மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்தது ஹோண்டா. ஆனால், கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அமேஸ் கார் மூலம் மிக விரைவான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்து வந்தது.

இதன் பலனாக கடந்த நிதி ஆண்டில் கார் விற்பனையில் மாருதி, ஹூண்டாய் நிறுவனத்துக்கு அடுத்த இடத்தை ஹோண்டா பிடித்துள்ளது. இதுதவிர, புதிய சிட்டி காரின் வருகையும் ஹோண்டாவுக்கு புதிய தெம்பை அளித்தது.
கடந்த நிதி ஆண்டில் 1.33 லட்சம் கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த ஆண்டில் புதிய மொபிலியோ எம்பிவி கார் மற்றும் புதிய ஜாஸ் ஹேட்ச்பேக் கார் ஆகியவற்றின் மூலம் இந்த இடத்தை நிரந்தரமாக தக்க வைக்கும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications








