புத்தம் புதிய எஸ்யூவி மாடலை அறிமுகம் செய்ய ஹோண்டா திட்டம்
புத்தம் புதிய எஸ்யூவி மாடலை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. டீசல் மாடல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வெகுவேகமாக இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறது.
இந்த நிலையில், கோயம்புத்தூரில் உள்ள மான்செஸ்டர் ஹோண்டா கார் ஷோரூமில் 500வது கார் டெலிவிரி கொடுப்பதற்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஹோண்டா கார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல் துறை அதிகாரி ஞானேஸ்வர் சென் கலந்து கொண்டார். அப்போது, புதிய எஸ்யூவியை அறிமுகம் செய்யும் திட்டமுள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அவர் அதிக வர்த்தக வாய்ப்பும், வரவேற்பும் இருக்கும் எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய மாடலை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

பிரியோ அடிப்படை மாடல்
ஹோண்டாவின் அமேஸ், மொபிலியோ கார்களை தொடர்ந்து பிரியோ அடிப்படையிலான காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக இருக்கும்.
குறிப்பு: மாதிரிக்காக ஹோண்டா வெஸல் எஸ்யூவி படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

எஞ்சின் ஆப்ஷன்
அமேஸ், சிட்டி, மொபிலியோ கார்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் கொணடதாக இருக்கும். இந்தியாவில் 1.2 லிட்டர் அல்லது 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பொருத்தும் வாய்ப்பு ஹோண்டாவிடம் உள்ளது.

போட்டியாளர்கள்
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், ரெனோ டஸ்ட்டர் போன்ற காம்பேக் ரக எஸ்யூவி மாடலுக்கு எதிராக இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்படும்.

வர்த்தக வாய்ப்பு
அதிக வரவேற்பு கொண்ட காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மாருதி, ஹூண்டாய் நிறுவனங்களும் விரைவில் களமிறங்க திட்டமிட்டுள்ளன. இருப்பினும், ஹோண்டா தயாரிப்புகளுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தனி மதிப்பு இருந்து வருகிறது. எனவே, ஹோண்டாவும் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்தால் ஹோண்டாவின் விற்பனையில் அது நிச்சயம் அதிக பங்களிப்பை வழங்கும்.

4 லட்ச ரூபாய் கார்
ரூ.4 லட்சத்தில் புதிய கார் அறிமுகம் செய்யப்படுமா என்ற கேள்விக்கு, பிரியோவைவிட விலை குறைவான காரை அறிமுகம் செய்யும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications








