இந்தியாவில் 200வது கார் ஷோரூமை திறந்த ஹோண்டா!

By Saravana

செகந்திராபாத் நகரில் புதிய கார் ஷோரூமை ஹோண்டா நிறுவனம் திறந்துள்ளது. மெட்ரோ ஹோண்டா என்ற பெயரில் திறக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஷோரூம் அந்த நிறுவனத்தின் 200வது கார் ஷோரூமாகும். இதனை ஹோண்டா இந்தியா கார் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹிரோனோரி கனயாமா திறந்து வைத்தார்.

ஹோண்டா நிறுவனத்தின் சிட்டி, மொபிலியோ, அமேஸ் உள்ளிட்ட அனைத்து கார் மாடல்களும் விற்பனையில் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. அடுத்து புதிய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் திட்டமிட்டுள்ளது.

Honda Car Showroom

இதற்கு ஏற்றாற்போல் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும், விற்பனையை அதிகரிக்கவும் டீலர்ஷிப் நெட்வொர்க்கை ஹோண்டா பலப்படுத்தி வருகிறது. வரும் 2017ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ஆண்டுக்கு 3 லட்சம் கார்களை விற்பனை செய்வதற்கு இலக்கு வைத்துள்ளது.

இதற்காக, அடுத்த 16 மாதங்களில் 100 புதிய டீலர்ஷிப்புகளை திறக்க முடிவு செய்துள்ளது. இதன்மூலம், மூன்றாம் நிலை நகரங்கள் வரை மிக வலுவான டீலர்ஷிப் கட்டமைப்பை பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, November 15, 2014, 9:58 [IST]
English summary

 The 200th Honda dealership has been setup in Secunderabad by Metro Honda. The new dealership was inaugurated by Hironori Kanayama, President and CEO, Honda Cars India. The Japanese manufacturer has an aggressive expansion plan for the near future.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+