முதல் மாத விற்பனையில் புதிய ஹோண்டா சிட்டி அசத்தல்!

By Saravana

அமேஸ் வந்தது முதல் ஹோண்டாவின் விற்பனை றெக்கை கட்டி பறக்கத் துவங்கியது. அந்த உயரத்தை தற்போது புதிய சிட்டி காரும் இன்னும் ஒரு படி மேலே கொண்டு சென்றுள்ளது.

கடந்த மாதம் 7,184 சிட்டி கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இதன்மூலம், அந்த நிறுவனத்தின் மொத்த விற்பனை 15,174 கார்கள் என்ற புதிய விற்பனை உச்சத்தை தொட்டது.

New Honda City

அமேஸ் காருடன் சேர்ந்து தற்போது புதிய சிட்டி காரும் வலு சேர்க்க துவங்கியுள்ளதால், ஹோண்டாவுக்கு இந்த ஆண்டு சிறப்பான துவக்கமாக அமைந்துள்ளது.

மேலும், நடப்பு நிதி ஆண்டில் முதல்முறையாக அந்த நிறுவனத்தின் கார் விற்பனை ஒரு லட்சத்தை கடந்து புதிய மைல்கல்லை எட்டியது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மாதம் வரையிலான நடப்பு நிதி ஆண்டு காலக்கட்டத்தில் 1,01,370 கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. இது 78 சதவீத வளர்ச்சியாகும்.

இந்த நிலையில், டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹோண்டாவின் புதிய மொபிலியோ எம்பிவி கார் மற்றும் புதிய தலைமுறை ஜாஸ் ஆகியவை அடுத்த ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த புதிய கார்களின் வருகையும் ஹோண்டாவின் விற்பனையில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 3, 2014, 10:20 [IST]
English summary
Honda has sold 7184 units of the City in less than a month of its launch and this resulted in the automaker registering the highest ever monthly sales of 15714 units.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+