முறுக்கேறி நிற்கும் புதிய ஹோண்டா சிட்டி கார்!

By Saravana

புதிய ஹோண்டா சிட்டி காரின் பெர்ஃபார்மென்ஸ் மாடல் பிலிப்பைன்ஸ் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டாவின் பெர்ஃபார்மென்ஸ் கிட் பார்ட்னரான மியூஜென் நிறுவனம் இந்த புதிய பாடி கிட்டை அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா சிட்டி காரை மென்மையாக பார்த்து ரசித்த நம் இந்திய வாடிக்கையாளர்களின் கண்களுக்கு இந்த புதிய அவதாரத்திலான ஹோண்டா சிட்டி கார் நிச்சயம் கவரும். அதற்காக, மியூஜென் பாடி கிட் பொருத்தப்பட்ட ஹோண்டா சிட்டி காரின் சில படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் கொடுத்துள்ளோம்.

பாடி கிட் மட்டும்

பாடி கிட் மட்டும்

கடந்த வாரம் இந்த பிரத்யேக பாடி கிட் பொருத்தப்பட்ட புதிய ஹோண்டா சிட்டி அறிமுகம் செய்யப்பட்டது. வெளித்தோற்றத்தை மாற்றும் வகையிலான ஆக்சஸெரீஸ்கள் மட்டும் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எஞ்சின் ட்யூனிங் மற்றும் சஸ்பென்ஷன் மாற்றங்கள் குறித்து பின்னர் தகவல்கள் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

பாடி கிட்

பாடி கிட்

முன்பக்கத்தில் ஏர் ஸ்பிளிட்டர்கள், சைடு ஸ்கர்ட், பூட் லிட் லிப் ஸ்பாய்லர், கருப்பு நிற கிரில், கார்பன் ஃபைபரிலான ரியர் வியூ கண்ணாடிகளுக்கான கவர், 17 இஞ்ச் அலுமினியம் வீல்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.

வண்ணம்

வண்ணம்

டஃபேட்டா வெள்ளை நிறமும் இந்த மாடலுக்கான சிறப்பு வண்ணமாக கொடுக்கப்படுகிறது. மேலும், வலது புற ஏ பில்லர் மற்றும் இடதுபுற சி பில்லரில் சிவப்பு, தங்கம் மற்றும் கருப்பு வண்ணத்திலான மியூஜென் மாடலுக்கான வண்ணமாக தீட்டப்பட்டுள்ளது. மேலும், ஹோண்டாவுக்கு பதிலாக மியூஜென் சிட்டி என்ற பிராண்டில் வந்துள்ளது.

 விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

இந்த ஆண்டு மூன்றாவது காலாண்டில் பிலிப்பைன்ஸ் மார்க்கெட்டில் இந்த புதிய மியூஜென் பெர்ஃபார்மென்ஸ் சிட்டி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மேலும், பிற மார்க்கெட்டுகளுக்கும் இந்த மியூஜென் சிட்டி கார் மாடலை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஹோண்டா தெரிவிக்கிறது. இதில், இந்தியாவுக்கும் இடமிருக்கும் என்று நம்பலாம். ஆனால், காலவரையறை எதுவும் குறிப்பிடவில்லை.

More from DriveSpark

Article Published On: Monday, April 28, 2014, 11:55 [IST]
English summary
Mugen, Honda's performance and motorsports division, has released its version of the new Honda City. Unveiled last week by Honda Cars Philippines, the 2014 City Mugen Prototype will be available for purchase in that country in the third quarter of this year. Philippines is the second largest market for Mugen.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+