பிப்ரவரியில் சிட்டி, அமேஸ் புண்ணியத்தில் ஹோண்டா கார் விற்பனை அமோகம்
கடந்த மாதம் சிட்டி, அமேஸ் கார்களின் பெரும் பங்களிப்புடன் ஹோண்டாவின் கார் விற்பனை 123 சதவீதம் அதிகரித்துள்ளது. இது அந்த நிறுவனத்துக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 6,510 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த ஹோண்டா கார் நிறுவனம் கடந்த மாதம் 14,543 கார்களை ஹோண்டா விற்பனை செய்துள்ளது.

கடந்த மாதம் 7,213 சிட்டி கார்களையும், 6,030 அமேஸ் கார்களையும் ஹோண்டா விற்பனை செய்தது. இந்த இரு கார்களின் பங்களிப்புதான் ஹோண்டாவின் விற்பனையில் பன்மடங்கு உயர்வை கொடுத்துள்ளது.
இதுகுறித்து ஹோண்டாவின் விற்பனைப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் ஞானேஸ்வர் சென் கூறுகையில்," புதிய ஹோண்டா சிட்டி காருக்கு இருக்கும் வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. முதல் மாதத்திலேயே மிட்சைஸ் செக்மென்ட்டில் முன்னிலை பெற்றுள்ளது சிட்டி கார்.
எங்களது இரண்டு கார் ஆலைகளிலும் உற்பத்தி நடந்து வருவதால், டெலிவிரியும் கொடுப்பதிலும் சீரான நிலை இருக்கிறது, என்று கூறினார். சிட்டி, அமேஸ் தவிர்த்து கடந்த மாதம் 1,235 பிரியோ கார்களையும், 65 சிஆர்வி எஸ்யூவிகளையும் ஹோண்டா விற்பனை செய்துள்ளது. 252 கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாகவும் ஹோண்டா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








