பாரீஸ் மோட்டார் ஷோவில் கலக்கும் புதிய ஹோண்டா காம்பேக்ட் எஸ்யூவி!
பாரீஸ் மோட்டார் ஷோவில் மிக ஸ்டைலான காம்பேக்ட் எஸ்யூவியை அறிமுகம் செய்துள்ளது ஹோண்டா கார் நிறுவனம்.
சிஆர்-வி போன்று இதனை எச்ஆர்-வி என்று பெயரிட்டு அழைக்கிறது ஹோண்டா. முதலில் ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள இந்த காம்பேக்ட் எஸ்யூவி இன்னமும் புரோட்டோடைப் நிலையிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இன்னும் சில மாதங்களில் உற்பத்திக்கு செல்ல இருப்பதாகவும் ஹோண்டா தெரிவித்துள்ளது. ரெனோ டஸ்ட்டர் உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும். மேலும், இந்த மாடல்களுக்கு சவாலான விலை கொண்டதாகவும் இந்த மாடலை நிலைநிறுத்தவும் ஹோண்டா முடிவு செய்துள்ளதாம்.

மிக ஸ்டைலான இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக முதல்கட்டத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால், அதற்கான கால அளவு எதையும் ஹோண்டா இதுவரை நிர்ணயிக்கவில்லை.


Click it and Unblock the Notifications








