சிட்டி கார் உற்பத்தியை திடீரென நிறுத்தி வைத்த ஹோண்டா... ஏன், ஏன்?
அமேஸ், சிட்டி, மொபிலியோ என வரிசையாக ஹோண்டா களமிறக்கும் மாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்து வருகின்றன. அமேஸ் மற்றும் சிட்டி கார்கள் தொடர்ந்து விற்பனையில் நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹோண்டா மொபிலியோ எம்பிவி காருக்கும் எக்கச்சக்கமான முன்பதிவு எண்ணிக்கை கிடைத்துள்ளது. இதுவரை 10,000க்கும் அதிகமான மொபிலியோ கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, டெல்லியில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த சிட்டி காரின் உற்பத்தியை ராஜஸ்தானிலுள்ள தபுகெரா ஆலைக்கு ஹோண்டா மாற்றுகிறது. தபுகெரா ஆலையில் அமேஸ் காருக்கு அடுத்து சிட்டி காரின் உற்பத்தியும் அடுத்த மாதம் துவங்கப்பட உள்ளது.
இனி டெல்லி ஆலையில் மொபிலியோ காரை உற்பத்தி செய்யப்பட உள்ளது. எனவே, இந்த மாதம் முழுவதும் ஒரு சிட்டி கார் கூட இந்தியாவில் தயாரிக்கப்படாது. இதனால், ஹோண்டா சிட்டி காருக்கான வெயிட்டிங் பீரியட் கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








