நடப்பு நிதி ஆண்டில் புதிதாக 1,000 பேருக்கு வேலை: ஹோண்டா அறிவிப்பு
இந்தியாவில் 1,000 புதிய பணியாளர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டில் உற்பத்தி திறனை வெகுவாக உயர்த்துவதற்கு ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இதற்காக, புதிய உற்பத்தி பிரிவில் பணிபுரிவதற்காக 1,000 பேரை வேலைக்கு நியமிக்க இருக்கிறது.

கிரேட்டர் நொய்டா ஆலையில் 3,000 தொழிலாளர்களும், தபுகெராவில் உள்ள ஹோண்டா கார் ஆலையில் 2,200 பேரும் பணிபுரிகின்றனர். ஒட்டுமொத்தாக நேரடியாகவும், மறைமுகமாகவும் தற்போது 9,000 பேர் ஹோண்டா கார் ஆலைகளில் பணிபுரிகின்றனர்.
இரு ஆலைகளிலும் சேர்த்து ஆண்டுக்கு 1.2 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனை ஹோண்டா பெற்றிருக்கிறது. இந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 லட்சம் கார்களை உற்பத்தி செய்வதற்கு ஹோண்டா இலக்கு வைத்துள்ளது.
இதற்காக, புதிய உற்பத்தி பிரிவுகளில் பணியாளர் எண்ணிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டிற்குள் புதிய பணியாளர்களை நியமிக்கும் பணிகள் முடிந்துவிடும் என்று ஹோண்டா கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








