இந்தியாவில் சிஆர்வி, அக்கார்டு கார்களை திரும்ப அழைக்கும் ஹோண்டா
இந்தியாவில் சிஆர்-வி எஸ்யூவி மற்றும் அக்கார்டு கார்களுக்கு ஹோண்டா கார் நிறுவனம் ரீகால் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
குறிப்பிட்ட காலத்தில் தயாரிக்கப்பட்ட அக்கார்டு, சிஆர்வி மாடல்களில் முன் இருக்கை பயணிக்கான ஏர்பேக்கின் இன்ஃப்ளேட்டரில் பிரச்னையை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

இதனை சரிசெய்து தருவதற்காக மேற்கண்ட இரு கார் மாடல்களையும் ஹோண்டா திரும்ப அழைக்க உள்ளது. கடந்த 2003ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 1,085 அக்கார்டு கார்களும், 252 சிஆர்வி எஸ்யூவிகளும் இந்த திரும்ப அழைக்கும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், 2002ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஒரே ஒரு சிஆர்வி எஸ்யூவியையும் சோதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் பாதுகாப்பை கருதி முன்னெச்சரிக்கையாக இந்த திரும்ப பெறும் அறிவிப்பை தாமாக முன்வந்து ஹோண்டா வெளியிட்டிருக்கிறது. இந்த திரும்ப அழைக்கும் நடவடிக்கையில் இருக்கும் கார்களின் விபரத்தை கீழ்கண்ட இணைப்பில் சென்று 17 இலக்க வின் நம்பரை கொடுத்து தெரிந்துகொள்ளலாம்.
திரும்ப அழைக்கும் விபரத்தை அறிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








