ஹோண்டா மொபிலியோ எம்பிவி காரின் புதிய படங்கள் வெளியீடு
புதிய மொபிலியோ காரின் புதிய படங்கள் ஹோண்டா இந்தியா இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த மாதம் விற்பனைக்கு வரும் இந்த புதிய எம்பிவி கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளறியுள்ளது.
டீசல் மாடலிலும் வருவதால் பல வாடிக்கையாளர்கள் மொபிலியோவின் வருகையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அவர்களின் ஆவலைத் தூண்டிவிடும் விதத்தில் புதிய படங்களை ஹோண்டா வெளியிட்டு இருக்கிறது. அதனை ஸ்லைடரில் கூடுதல் தகவல்களுடன் சேர்த்து காணலாம்.

டாப் வேரியண்ட்
ஹோண்டா இந்தியா இணைய பக்கத்தில் வெளிப்புறத் தோற்றத்தை காட்டும் 2 படங்களும், உள் வடிவமைப்பை 360 டிகிரி கோணத்தில் காணக்கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ளன.

வெளிப்புற படங்கள்
ஹோண்டா மொபிலியோ காரின் டீசல் மாடலின் டாப் வேரியண்ட்டின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அலாய் வீல்கள், பாடி கலர் பம்பர், கைப்பிடிகள், ரியர் கண்ணாடிகள் போன்றவை இருக்கின்றன. பனி விளக்குகள், ரிவர்ஸ் கேமரா, ரியர் வைப்பர் பிளேடும் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்டிரியர்
உள் வடிவமைப்பை 360 டிகிரி கோணத்தில் கண் குளிர காணும் வசதி அந்த இணையப் பக்கத்தில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. அமேஸ் காரின் டேஷ்போர்டு டிசைன் அப்படியே இந்த காரிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரில் மாற்றம் இருக்கிறது.

பெட்ரோல்
பெட்ரோல் மாடலில் 1.5 லிட்டர் எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் அல்லது சிவிடி டிரான்ஸ்மிஷனுடன் கிடைக்கும்.

டீசல் மாடல்
டீசல் மாடலில் 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 லிட்டர் ஐ- டிடெக் டீசல் எஞ்சின் இருக்கும். இது மேனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே கிடைக்கும். மாருதி எர்டிகாவுக்கு நேரடி போட்டியை கொடுக்கும் வகையில் வருகிறது.


Click it and Unblock the Notifications








