இரண்டு மாதத்திற்குள் விற்பனைக்கு வருகிறது புதிய ஹோண்டா மொபிலியோ!
அடுத்த 2 மாதத்திற்குள் புதிய ஹோண்டா மொபிலியோ எம்பிவி கார் விற்பனைக்கு வர இருக்கிறது.
டெல்லி அருகே, கிரேட்டர் நொய்டாவிலுள்ள ஹோண்டா ஆலையில் இந்த புதிய மொபிலியோ காரின் உற்பத்தி சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ளது. ஹோண்டாவிடம் இருந்து வரும் இந்த புதிய எம்பிவி கார் வாடிக்கையாளர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

7 சீட்டர் காராக வரும் இந்த புதிய கார் மாருதி எர்டிகா, செவர்லே என்ஜாய் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும். இந்த கார் பெட்ரோல் மட்டுமின்றி 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வருவதால், வாடிக்கையாளர்களிடம் ஆவல் இருந்து வருகிறது.
இந்த புதிய எம்பிவி கார் ஹோண்டா விற்பனையில் மிக முக்கிய பங்களிப்பை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரைத் தொடர்ந்து அடுத்ததாக புதிய தலைமுறை ஜாஸ் காரை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








