தாய்லாந்தில் புதிய ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம்!
தாய்லாந்து மார்க்கெட்டில் புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடந்த 2003ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஜாஸ் காரின் புதிய தலைமுறை மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.
தோற்றத்தில் பெரிய மாற்றங்களுடன், பல நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்டதாக வந்த ஜாஸ் கார் பிரிமியம் ஹேட்ச்பேக் ரகத்திலான மாடல். கடந்த ஆண்டு ஹோண்டாவின் தாயகமான ஜப்பானில் விற்பனைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, தற்போது தாய்லாந்திலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

எஞ்சின்
117 எச்பி பவரையும், 146 என்எம் டார்க்கையும் அளிக்கும் 1.5 பெட்ரோல் எஞ்சின் மற்றும் சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்டதாக தாய்லாந்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

அம்சங்கள்
ஸ்டார்ட்/ ஸ்டாப், இபிடி.,யுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் உள்பட 6 ஏர்பேக்குகளுடன் அங்கு வந்துள்ளது. 7 இஞ்ச் டிஎஃப்டி திரை மற்றும் ஆடியோ சிஸ்டம் போன்றவை கூடுதல் அம்சங்களாக இருக்கின்றன.

இன்டிரியர்
கருப்பு நிற இன்டிரியர், அலுமினிய பினிஷிங் செய்யப்பட்டதாக உள்ளது. தாய்லாந்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியா வருகிறது. இந்தியாவில் பெட்ரோல் மாடல் மட்டுமின்றி, டீசல் மாடலிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

விலை
தாய்லாந்தில் 5.50 லட்சம் பட் விலையில், அதாவது இந்திய மதிப்பில் ரூ.9.97 லட்சம் மதிப்பில் அங்கு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








