ஜூலையில் புதிய ஹோண்டா மொபிலியோ எம்பிவி கார் விற்பனைக்கு வருகிறது.
வரும் ஜூலை மாதம் இந்தியாவில் புதிய மொபிலியோ எம்பிவி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக ஹோண்டா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஹோண்டா எஞ்சினுடன் ஒரு எம்பிவி காரில் செல்ல வேண்டும் என்ற கனவுடன் காத்திருப்பவர்களுக்கு இது நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடலிலும் வருவது மற்றொரு பலம். நகர்ப்புற பயன்பாட்டுக்கும் சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், மேனுவல் டிரான்ஸ்மிஷனில் மட்டுமே வர இருக்கிறது.
ஜூலையில் விற்பனைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டபோதிலும், தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், ஹோண்டா மொபிலியோவை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இதன் மூலம் தங்களது கார் வாங்கும் திட்டத்தை உறுதி செய்து கொள்ளலாம்.
கடந்த ஆண்டு விற்பனைக்கு வந்த அமேஸ், இந்த ஆண்டு துவக்கத்தில் வந்த புதிய சிட்டி போன்ற கார்களை தொடர்ந்து புதிய மொபிலியோ எம்பிவி காரும் ஹோண்டாவுக்கு விற்பனையில் பெரும் பங்களிப்பை வழங்கும் என்று கருதப்படுகிறது.
பைக்கில் ஊஞ்சலாடும் வினோதம்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ!


Click it and Unblock the Notifications








