ஹோண்டா மொபிலியோ காருக்கான முன்பதிவு 6,500ஐ தாண்டியது!
ஹோண்டா மொபிலியோ கார் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இதுவரை 6,500 பேர் மொபிலியோ காரை முன்பதிவு செய்துள்ளனர்.
விலை விபரத்தை தெரிந்து கொண்டு முன்பதிவு செய்வதற்கு பலர் காத்திருந்த நிலையில், நேற்றுமுன்தினம் விலை விபரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதையடுத்து, முன்பதிவு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம்போல் டீசல் மாடலுக்கான முன்பதிவு அதிகம் இருப்பதாக டீலர் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோண்டா கார் நிறுவனத்தின் முதல் எம்பிவி காராக இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கும் மொபிலியோ 30 முதல் 40 வயது வரையிலான வாடிக்கையாளர்களை இலக்காக கொண்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
பெட்ரோல் மாடலில் மூன்று வேரியண்ட்டுகளிலும், டீசல் மாடலில் 4 வேரியண்ட்டுகளுமாக வந்துள்ளது. பெட்ரோல் மாடல் ரூ.6.49 லட்சம் விலையிலும், டீசல் மாடல் ரூ.7.89 லட்சம் ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








