ஹோண்டா மொபிலியோ, ஜாஸ் கார்களுக்காக வெயிட்டிங்கா... உங்களுக்கான செய்திதான் இது!!

By Saravana

இந்திய கார் மார்க்கெட்டின் மூன்றாவது பெரிய கார் தயாரிப்பாளர் என்ற இடத்தை ஹோண்டா பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய சிட்டி மற்றும் அமேஸ் கார்களால் இந்த இடம் சாத்தியமாகும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்த ஆண்டு இரண்டு புதிய கார் மாடல்களை ஹோண்டா அறிமுகப்படுத்த இருக்கிறது. அதில் ஒன்று புதிய தலைமுறை ஜாஸ் கார் மற்றும் மொபிலியோ காம்பெக்ட் எம்பிவி கார் மாடல்கள். இந்த இரு கார் மாடல்களையும் எதிர்பார்த்து காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கான கூடுதல் தகவல்கள் ஸ்லைடரில் வழங்கப்பட்டுள்ளன.

 விற்பனைக்கு எப்போது?

விற்பனைக்கு எப்போது?

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் இந்தியர்களுக்கு தரிசனம் தந்த இந்த இரு கார் மாடல்களும் வரும் பண்டிகை காலத்தையொட்டி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளன.

 நான்தான் ஃபர்ஸ்ட்

நான்தான் ஃபர்ஸ்ட்

வரும் பண்டிகை காலத்தையொட்டி மொபிலியோ எம்பிவி கார் முதலில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து புதிய தலைமுறை ஜாஸ் காரும் விற்பனைக்கு வர உள்ளது.

 உற்பத்தி

உற்பத்தி

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள மொபிலியோ காரும், ராஜஸ்தான் ஆலையில் புதிய ஜாஸ் காரும் உற்பத்தி செய்யப்பட உள்ளன. வரும் ஜூன் மாதம் மொபிலியோ கார் உற்பத்தி இந்தியாவில் துவங்கும். இதேபோன்று, ஜூலையில் புதிய ஜாஸ் காரின் உற்பத்தி இந்திய மண்ணில் துவங்கப்பட உள்ளது.4

 டீசல் மாடல்கள்

டீசல் மாடல்கள்

இந்த இரு கார்களிலும் ஹோண்டாவின் புதிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

3வது இடம்

3வது இடம்

தற்போது ஹோண்டா நிறுவனம் இந்தியாவின் 3வது பெரிய கார் தயாரிப்பாளர் என்ற அந்தஸ்தை விரைவில் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புதிய மாடல்கள் மூலம் அந்த இடத்தை எளிதாக தக்க வைத்துக் கொள்ளும் நம்பிக்கையுடன் ஹோண்டா தீவிரமாக செயலாற்றி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 8, 2014, 13:40 [IST]
English summary
If a new report is to be believed, Honda Cars India will launch the Jazz here this year, which was earlier thought to have been pushed back to 2015.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+