ஹோண்டா மொபிலியோ அறிமுகம் - படங்கள்
டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய ஹோண்டா மொபிலியோ எம்பிவி கார் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தோனேஷியாவில் விற்பனைக்கு வந்துவிட்ட இந்த புதிய கார் இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தியாவிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

எஞ்சின்
அமேஸ், சிட்டி கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த புதிய எம்பிவி காரிலும் பொருத்தப்பட்டிருக்கும். பெட்ரோல் மாடலும் வருகிறது.

இடவசதி
4.4 மீட்டர் நீளம் கொண்ட இந்த புதிய எம்பிவி கார் 2,650 மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதால், தாராள இடவசதி கொண்டதாக இருக்கும்.

7 சீட்டர்
மூன்று வரிசை இருக்கை அமைப்பு கொண்ட ஹோண்டா மொபிலியோவில் 7 பேர் பயணிக்கலாம்.

விற்பனை
ஏப்ரல் மாதத்தில் இந்த புதிய எம்பிவி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. மாருதி எர்டிகாவுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








