ஹோண்டா மொபிலியோ காரில் 2 புதிய வேரியண்ட்டுகள் அறிமுகம்!
கூடுதல் வசதிகளுடன் ஹோண்டா மொபிலியோ காரின் 2 புதிய டாப் வேரியண்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஹோண்டா மொபிலியோ எம்பிவி கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், கூடுதல் வசதிகளுடன் மொபிலியோ காரில் 2 புதிய வேரியண்ட்டுகளை ஹோண்டா சேர்த்துள்ளது. புதிய வேரியண்ட்டுகளின் விலை, கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் உள்ளிட்ட விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட் விபரம்
பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் E, S மற்றும் V ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, கூடுதல் ஆக்சஸெரீஸ்களுடன் தோற்றத்தில் படு கம்பீரமான மொபிலியோ ஆர்எஸ் என்ற பிரத்யேக மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டீசல் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்ட மொபிலியோ ஆர்எஸ் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

கூடுதல் ஆக்சஸெரீஸ்கள்
தற்போது பெட்ரோல் மற்றும் டீசல் மாடலின் V என்ற டாப் வேரியண்ட்டில் ஆடியோ, வீடியோ சிஸ்டம் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் சேர்க்கப்பட்ட V(O) என்ற புதிய வேரியண்ட்டில் கிடைக்கும். இது டாப் வேரியண்ட்டாக இருக்கும். மொபிலியோ ஆர்எஸ் மாடலிலும் இதே வசதிகளுடன் RS(O) என்ற புதிய வேரியண்ட்டிலும் விற்பனைக்கு கிடைக்கும் என்று ஹோண்டா வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏவிஎன் சிஸ்டம்
ஹோண்டா மொபிலியோ காரில் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய ஆடியோ, வீடியோ சிஸ்டத்தில்(ஏவிஎன்.,) 15.7 செமீ அளவு கொண்ட டச்ஸ்கிரீன் கொடுக்கப்ட்டுள்ளது. சாட்டிலைட் அடிப்படையிலான வரைபடங்கள் மற்றும் வாய்மொழித் தகவல்களை பெறும் வசதி உள்ளது.

ஒருங்கிணைந்த வசதிகள்
டிவிடி, புளூடூத், யுஎஸ்பி, ஆக்ஸ் போர்ட் மற்றும் ஐபாட், உள்ளிட்ட சாதனங்களுடன் இணைக்கலாம். இதனை புளூடூத் வாயிலாக ஸ்மார்ட்போனுடன் இணைத்து பல்வேறு கூடுதல் வசதிகளை பெறலாம்.

விலை விபரம்
புதிய வேரியண்ட்டுகள் விலை விபரம்
மொபிலியோ பெட்ரோல் வி(ஓ): ரூ.9.46 லட்சம்
மொபிலியோ டீசல் வி(ஓ) : ரூ.10.45 லட்சம்
மொபிலியோ டீசல் ஆர்எஸ்(ஓ): ரூ.11.55 லட்சம்


Click it and Unblock the Notifications








