குட் நியூஸ்... ஜூலை 23ல் விற்பனைக்கு வருகிறது புதிய ஹோண்டா மொபிலியோ!

By Saravana

பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ள புதிய ஹோண்டா மொபிலியோ கார் வரும் 23ந் தேதி இந்திய மண்ணில் விற்பனைக்கு வருகிறது. இதனால், வாடிக்கையாளர்களின் ஆவலும், எதிர்பார்ப்பும் ஏகத்துக்கும் எகிறியுள்ளது.

மாருதி எர்டிகாவைவிட கூடுதல் இடவசதி மற்றும் வசதிகளை கொண்டிருக்கும் என்பதுடன் ஹோண்டா பிராண்டின் மீதான நன்மதிப்பும் இந்த கார் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.


டிவி விளம்பரம்

டிவி விளம்பரம்

இந்த காரை பிரபலப்படுத்தும் வகையில் டிவி விளம்பரங்களை ஹோண்டா வெளியிட்டு வருகிறது. அதில், பிரபல இந்தி சிரிப்பு நடிகர் கபில் சர்மா தமது பாணியில் நகைச்சுவையாக நடித்துள்ளார்.

 மால்களில் தரிசனம்

மால்களில் தரிசனம்

டிவி விளம்பரம் மட்டுமின்றி நாட்டின் முக்கிய நகரங்களில் இருக்கும் வணிக வளாகங்களிலும் இந்த காரை காட்சிக்கு வைத்து வருகிறது ஹோண்டா. தமிழகத்தில் சென்னை மற்றும் கோவை நகரங்களில் அடுத்த மாதம் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

 டீசல் மீது ஆவல்

டீசல் மீது ஆவல்

ஹோண்டா மொபிலியோ காரின் டீசல் மாடல் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அதிகபட்சமாக 100 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க்கையும் அளிக்கும் ஐ- டிடெக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

 பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடலில் 119 பிஎஸ் பவரை அதிகபட்சமாக வழங்கும் 1.5 லிட்டர் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். பெட்ரோல் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தவிர்த்து, சிவிடி டிரான்ஸ்மிஷன் கொண்ட மாடலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

 வசதிகள்

வசதிகள்

போட்டியாளர்களைவிட பிரிமியம் காம்பேக்ட் எம்பிவி காராக இதனை நிலைநிறுத்த ஹோண்டா திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எம்பிவி காரில் புளூடூத், ஆக்ஸ், யுஎஸ்பி போர்ட் வசதிகளுடன் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் கேமரா, அலாய் வீல்கள் போன்றவை முக்கிய ஆக்சஸெரீஸ்களாக கொடுக்கப்பட உள்ளன.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.6 லட்சம் முதல் ரூ.6.5 லட்சம் வரையிலான ஆரம்ப விலையில் இந்த புதிய ஹோண்டா மொபிலியோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி எர்டிகா, செவர்லே என்ஜாய் போன்ற மாடல்களுக்கும், விரைவில் வரும் டட்சன் கோ ப்ளஸ் காருக்கும் நேரடி போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 2, 2014, 12:15 [IST]
English summary
The MPV segment is flourishing in India and best seller of its segment is Maruti Suzuki Ertiga. However, the competition is ready to launch its products in the following months. First to join the party will be Honda's MPV, christened Mobilio that will be launched on 23rd July, 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+