ஹோண்டா மொபிலியோ கார் விளம்பரத்தில் கபில் ஷர்மா!
அடுத்த மாதம் ஹோண்டா மொபிலியோ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த புதிய 7 சீட்டர் எம்பிவி கார் மாருதி எர்டிகாவுக்கு நேரடி போட்டியாக களமிறங்க உள்ளது.
மேலும், இந்த புதிய காரை பிரபலப்படுத்தும் பணிகளை ஹோண்டா கார் நிறுவனம் துவங்கிவிட்டது. இதற்காக, வீடியோ விளம்பரம் ஒன்றையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. யூ ட்யூபிலும் மிக வேகமாக பார்வைகளை பெற்று வருகிறது.
இந்தி ரசிகர்களிடையே பிரபலமான சிரிப்பு நடிகர் கபில் ஷர்மாவின் நகைச்சுவை காட்சிகள் ததும்ப இந்த வீடியோ விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கம்போல் தனது பாணியில் காமெடியாக காரின் சிறப்பம்சங்களை இரட்டை அர்த்தத்தில் அவர் விளக்கும்போது நகைச்சுவையின் ஊடே செல்வதால் ரசிக்க வைக்கிறது.
அந்த வீடியோ விளம்பரத்தை நீங்களும் கண்டு ரசிக்கலாம்.
<center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/3jpLOO8SRM0" frameborder="0" allowfullscreen></iframe></center>


Click it and Unblock the Notifications








