புதிய ஹோண்டா மொபிலியோ ஆர்எஸ் காரின் அதிகாரப்பூர்வ படங்கள், தகவல்கள்
இந்தியாவின் எம்பிவி மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்திருக்கும் புதிய ஹோண்டா மொபிலியோ கார் சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு இதுவரை 6,500க்கும் மேற்பட்ட மொபிலியோ கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், மொபிலியோ காரின் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட மொபிலியோ ஆர்எஸ் மாடலும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டீசல் மாடலில் மட்டும் விற்பனைக்கு வந்திருக்கும் மொபிலியோ ஆர்எஸ் காரின் எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லை. சாதாரண மாடலும், ஆர்எஸ் மாடலின் பவர் வெளிப்படுத்தும் திறன் ஒன்றுதான்.
சாதாரண மாடலைவிட தோற்றத்திலும், வசதிகளிலும் கூடுதல் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மிடுக்காக காட்சியளிக்கும் மொபிலியோ ஆர்எஸ் காரின் படங்கள் மற்றும் கூடுதல் ஆக்சஸெரீஸ்கள் விபரங்களை ஹோண்டா அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

கூடுதல் தகவல்கள்
சாதாரண மாடலிலிருந்து மொபிலியோ ஆர்எஸ் மாடல் எவ்வாறு வேறுபடுகிறது என்பது குறித்து ஹோண்டா வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ படங்கள் மற்றும் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

புரொஜெக்டர் ஹெட்லைட்
புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பனி விளக்குகள்
குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட பனி விளக்குகள்.

கிரில்
கம்பீரமான முகப்பு கிரில்.

ஆர்எஸ் பேட்ஜ்
பின்புறத்தில் டெயில்லைட் கிளஸ்ட்டருக்கு கீழே ஆர்எஸ் பேட்ஜ் கொடுக்கப்பட்டுள்ளது.

கைப்பிடிகள்
குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட கதவு கைப்பிடிகள்.

புதிய அலாய் வீல்கள்
ஆர்எஸ் வேரியண்ட்டுக்கான பிரத்யேக டிசைன் கொண்ட அலாய் வீல்கள்.

பின்புற பம்பர்
குரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட பின்புற பம்பர்.

ரியர் வியூ கண்ணாடி
எலக்ட்ரிக் அட்ஜெஸ்ட், இன்கேட்டருடன் கூடிய ரியர் வியூ கண்ணாடிகள்

ஸ்பாய்லர்
டெயில்கேட் ஸ்பாய்லரும் மொபிலியோ ஆர்எஸ் காரின் சிறப்பு ஆக்சஸெரீயாக கொடுக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு
ரூ.50,000 முன்பணத்துடன் ஹோண்டா டீலர்களில் மொபிலியோ ஆர்எஸ் மாடலுக்கு முன்பதிவு செய்யப்படுகிறது. வரும் செப்டம்பர் மாதம் முதல் டெலிவிரி துவங்கும் என ஹோண்டா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








