ரீகால் புராணம்... சிஇஓ., உள்பட 13 அதிகாரிகளுக்கு சேலரி 'கட்': ஹோண்டா அதிரடி!
ஃபிட் ஹைபிரிட் கார்களுக்கு தொடர்ந்து ரீகால் விடுக்கப்பட்டதால் தலைமை செயல் அதிகாரி(சிஇஓ.,) உள்பட உயர் அதிகாரிகள் 13 பேருக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என ஹோண்டா நிர்வாகம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஃபிட்(இந்தியாவில் ஜாஸ்) காரின் ஹைபிரிட் மாடல்களில் ஏர்பேக் பிரச்னையை சரிசெய்து தருவதற்காக ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் ரீகால் அறிவிப்பை வெளியிட்டது. இந்த ஆண்டில் ஃபிட் காருக்கு விடுக்கப்படும் 5வது ரீகால் அறிவிப்பு இது. இதனால், ஹோண்டா பிராண்டின் தர விஷயத்தில் வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது.

மேலும், பல வாடிக்கையாளர்கள் ஹோண்டா மீது புகார்களை தெரிவித்தனர். இதனால், ஹோண்டா நிர்வாகம் கோபமடைந்தது. மேலும், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்தது. சிஇஓ., மற்றும் உயர் அதிகாரிகளின் 12 பேருக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என ஹோண்டா அறிவித்துள்ளது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு தலைமை செயல் அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகளின் சம்பளத்தில் 20 சதவீதமும், துணை நிர்வாக அதிகாரி அந்தஸ்த்தில் உள்ளவர்களுக்கு 10 சதவீதமும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்தின் செய்திதொடர்பாளர் அகிமி அன்டு கூறுகையில்," பல வாடிக்கையாளர்களை எங்களால் சமாதானப்படுத்த முடியவில்லை. இதற்காக, வாடிக்கையாளர்களிடம் மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறினார். இதனிடையே, தர விஷயங்களை மேற்பார்வை செய்யவும், கையாள்வதற்கு முதல்முறையாக புதிய பணியிடத்தை ஹோண்டா உருவாக்கியுள்ளதுடன் அந்த இடத்தில் மூத்த நிர்வாக அதிகாரி கொய்ச்சி புகுவோவை ஹோண்டா அமர்த்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








