பிரேக்கில் கோளாறு: ஹோண்டா அமேஸ், பிரியோ கார்களுக்கு ரீகால்
பிரேக் அமைப்பில் இருப்பதாக கருதப்படும் பிரச்னையை சரி செய்து தருவதற்காக ஹோண்டா நிறுவனத்தின் அமேஸ் மற்றும் பிரியோ கார்கள் திரும்ப அழைக்கப்பட உள்ளன.
பிரேக் பவரை வீல்களுக்கு சரிவிகிதத்தில் மாற்றி அனுப்பும் புரொபோர்ஷனிங் வால்வ் பகுதியில் பிரச்னை இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி 28 முதல் கடந்த ஜனவரி மாதம் 16ந் தேதி வரை தயாரிக்கப்பட்ட பெட்ரோல் அமேஸ் மற்றும் பிரியோ கார்களை திரும்ப அழைத்து சோதனை செய்ய ஹோண்டா கார் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மொத்தம் 15,623 பிரியோ கார்களும், 15,603 பெட்ரோல் அமேஸ் கார்களும் திரும்ப அழைக்கப்பட உள்ளன. பிரச்னை இருப்பது உறுதி செய்யப்பட்டால், இலவசமாக சரி செய்து தர இருப்பதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. டீசல் அமேஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக் அமைப்பு கொண்ட கார்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது கார் திரும்ப அழைக்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொள்ள 17 இலக்க VIN நம்பரை ஹோண்டாவின் இணையதளத்திற்கு சென்று சரிபார்த்து கொள்ளலாம். அதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஹோண்டா இணையதள பக்கம்!


Click it and Unblock the Notifications








