டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா அரங்கை அலங்கரிக்கப் போகும் கார்கள்

By Saravana

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா கார் நிறுவனம் பார்வைக்கு வைக்க இருக்கும் கார் மாடல்கள் பற்றிய விபரங்கள் வெளியாகியுள்ளன.

எதிர்கால கிராஸ்ஓவர் ரகத்தில் வடிவமைக்கப்பட உள்ள எம்பிவி கார்களுக்கான அடிப்படையாக ஒரு புதிய கான்செப்ட் ஒன்றை உலகளாவிய அளவில் ஹோண்டா அறிமுகம் செய்ய உள்ளது. விஷன் எக்ஸ்எஸ்-1 என்ற பெயரிலான இந்த கான்செப்ட் கார் அதிக இடவசதியையும், ஸ்போர்ட்டியான தோற்றத்தையும் கொண்டதாக இருக்கும்.

Honda Mobilio

பொதுவாக, அதிக இடவசதி கொண்ட கார்களை உருவாக்குவதில் ஹோண்டா நிபுணத்துவம் பெற்ற நிறுவனம். அந்த வகையில், இந்த புதிய கான்செப்ட்டும் இடவசதிக்கும், கவர்ச்சியான தோற்றத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதுதவிர, ஹோண்டா மொபிலியோ, புதிய ஜாஸ் கார், என்எஸ்எக்ஸ் கான்செப்ட் மற்றும் அக்கார்டு ஹைபிரிட் கார்களையும் ஹோண்டா பார்வைக்கு வைத்திருக்கும். ஜப்பானில் விற்பனையில் வெளுத்து வாங்கி வரும் புதிய வெஸல் எஸ்யூவி இந்தியாவுக்கு வரவில்லை.

மேலும், தற்போது விற்பனையில் இருக்கும் புதிய ஹோண்டா சிட்டி, அமேஸ் காம்பெக்ட் செடான் மற்றும் சிஆர்வி எஸ்யூவி மாடல்களும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹோண்டா கார் நிறுவனத்தின் அரங்கை அலங்கரிக்க உள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, January 18, 2014, 14:31 [IST]
English summary
Japanese car maker Honda will showcase a range of products, including the global unveiling of study model of a new crossover - Honda Vision XS-1, at the upcoming Auto Expo.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+