புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் அறிமுகம் - விபரம்
புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலம் இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது.
டிசைன், வசதிகள் என அனைத்திலும் மேம்படுத்தப்பட்டு வருவதுடன், டீசல் மாடலிலும் விற்பனைக்கு வர இருக்கிறது.

டீசல் எஞ்சின்
அமேஸ், சிட்டி கார்களில் பொருத்தப்பட்டிருக்கும் அதே 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் இந்த புதிய ஜாஸ் காரிலும் பொருத்தப்பட்டு வருகிறது. இந்த எஞ்சின் 100 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும். இதுதவிர, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடலிலும் விற்பனைக்கு கொண்டு வரப்படும். பெட்ரோல் மாடல் 88 பிஎஸ் பவர் கொண்டதாக இருக்கும்.

டீசல் மைலேஜ்
ஹோண்டா அமேஸ் டீசல் மாடல் லிட்டருக்கு 25.8 கிமீ மைலேஜையும், புதிய சிட்டி காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 26 கிமீ மைலேஜையும் தருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, அதே எஞ்சினுடன் வரும் புதிய ஜாஸ் கார் லிட்டருக்கு 25 கிமீ.,க்கு மேல் மைலேஜ் தரும் வகையில் இருக்கும்.

விற்பனை
வரும் ஏப்ரலில் புதிய ஹோண்டா ஜாஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிகிறது.

அம்சங்கள்
சிறப்பான டிசைன், கூடுதல் வசதிகள், தரமிக்க பாகங்கள் மற்றும் டீசல் மாடலில் வருவதால் ஓர் முழுமையான பிரிமியம் ஹேட்ச்பேக் வரும் புதிய ஜாஸ் மார்க்கெட்டில் அதிக வரவேற்பை பெறும் வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








