மாருதி கார்களுக்கான அதிரடி தள்ளுபடி சலுகைகள்: விபரம்!
கடந்த மாதம் மத்திய இடைக்கால பட்ஜெட்டில் கார்கள் மீதான உற்பத்தி வரி குறைக்கப்பட்டதையடுத்து, பெரும்பாலான கார் மாடல்களின் விலை குறைந்தது. இதன் எதிரொலியால் கார் விற்பனையில் சூடுபிடித்தது. ஆனால், மாருதி கார் நிறுவனத்தின் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லை.
இதையடுத்து, தற்போது மாருதி நிறுவனம் தனது பெரும்பாலான முன்னணி கார் மாடல்களுக்கு அதிரடி தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. மாருதி கார்களுக்கு வழங்கப்படும் தள்ளுபடி விபரங்களை மாடல் வாரியாக ஸ்லைடரில் காணலாம்.

ஸ்விஃப்ட் மற்றும் டிசையர்
இந்த இரு கார் மாடல்களுக்கும் ரூ.10,000 வரையில் மாருதி தள்ளுபடி வழங்குகிறது. மேலும், எக்ஸ்சேஞ்ச் போனசாக அதிகபட்சம் ரூ.50,000 வரையிலும் பெறலாம். கார்ப்பரேட் போனசாக ரூ.1,500 வரை பெற முடியும். ஸ்விஃப்ட் அல்லது டிசையர் கார் விரும்புபவர்களுக்கு ரூ.61,500 வரை அதிகபட்ச தள்ளுபடியை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

மாருதி ரிட்ஸ்
மாருதி ரிட்ஸ் காருக்கு நேரடி பணத் தள்ளுபடியாக ரூ.20,000 வரை பெறலாம். இதுதவிர, கார்ப்பரேட் டிஸ்கவுண்ட்டாக ரூ.1,500 மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.50,000 வரையிலும் பெற முடியும்.

மாருதி எஸ்எக்ஸ்4
எஸ்எக்ஸ் 4 காருக்கும் செமத்தியான ஆஃபர்களை மாருதி வழங்குகிறது. நேரடி பணச்சலுகையாக ரூ.40,000, எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.50,000, கார்ப்பரேட் போனசாக ரூ.1,500 வரையிலும் பெறலாம். ஒட்டுமொத்தமாக ஒரு லட்ச ரூபாய் வரையிலும் தள்ளுபடியாக பெறும் வாய்ப்பு உள்ளது.

மாருதி வேகன் ஆர்
மாருதி வேகன் ஆர் மற்றும் ஸ்டிங்ரே கார்களுக்கு ரூ.30,000 தள்ளுபடியையும், ரூ.30,000 எக்ஸ்சேஞ்ச் போனசையும், ரூ.1,500 கார்ப்பரேட் போனசாகவும் பெறலாம்.

மாருதி எர்டிகா
மாருதி எர்டிகா காருக்கு ரூ.20,000 நேரடி தள்ளுபடியாகவும், ரூ.20,000 எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.1,500 கார்ப்பரேட் போனசாகவும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

செலிரியோவுக்கு இல்லை
கடந்த மாதம் விற்பனைக்கு வந்த மாருதி செலிரியோ காருக்கு எந்தவொரு தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. ஏனெனில், அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே இடைக்கால பட்ஜெட் காரணமாக விலை குறைக்கப்பட்டது நினைவிருக்கலாம்.


Click it and Unblock the Notifications








