முன்னணி ஹேட்ச்பேக் கார்களுக்கான இப்போதைய தள்ளுபடி விபரம்!
பருவமழை காலத்தையொட்டி விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், சிறப்புத் தள்ளுபடி சலுகைகளை கார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. கார் வாங்கும் ஆசையை நிறைவேற்றுவதற்கான இந்த ஆண்டின் மிகச் சரியான தருணமாக இதனை ஆட்டோமொபைல் துறையினர் கூறுகின்றனர்.
இந்தநிலையில், மார்க்கெட்டில் முன்னணி ஹேட்ச்பேக் கார்களுக்கு பலத்த தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு பயன்படும் வகையில், அதன் விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். டீலர்களுக்கு செல்லும்போது தள்ளுபடி சலுகைகளை கேட்டுத் தெரிந்து கொண்டு அதிகபட்ச பயன்களை பெறும் வகையில் இந்த செய்தித் தொகுப்பை கொடுக்கப்படுகிறது.

வியக்க வைக்கும் சலுகைகள்
சில கார்களுக்கு வியக்க வைக்கும் அளவில் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அவற்றின் விபரங்களை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

மாருதி ரிட்ஸ்
மாருதி ரிட்ஸ் காரின் பெட்ரோல், டீசல் என இரு மாடல்களின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் ரூ.68,000 வரை அதிகபட்ச சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஆட்டோமேட்டிக் மாடலுக்கும் தள்ளுபடியை பெறலாம். இதில், ரூ.30,000 வரை விலையில் தள்ளுபடி, ரூ.35,000 வவரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் கார்ப்பரேட் போனசாக ரூ.3,000 பெறலாம்.

ஹூண்டாய் ஐ20
ஹூண்டாய் ஐ20 காரின் புதிய மாடல் விரைவில் வர இருக்கும் நிலையில், தற்போதைய மாடலுக்கு ரூ.38,000 வரை சேமிப்பு செய்யும் வாய்ப்பு உள்ளன. பெட்ரோல், டீசல் மாடல்களின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் ரூ.38,000 வரை தள்ளுபடியை பெறும் வாய்ப்புள்ளது. விலையில் தள்ளுபடியாக ரூ.15,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.20,000 வரையிலும் பெறலாம். இதுதவிர, கார்ப்பரேட் போனசாக ரூ.3,000 பெறலாம்.

ஃபோர்டு ஃபிகோ
ஃபோர்டு ஃபிகோ காரின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் ரூ.43,000 முதல் ரூ.51,000 வரை சிறப்பு சேமிப்புச் சலுகைகளை பெறலாம். ரூ.15,000 மதிப்புக்கு இலவச இன்ஸ்யூரன்ஸ், ரூ.20,000 மதிப்புக்கு எக்ஸ்சேஞ்ச் போனஸ், ரூ.8,000 வரையில் கார்ப்பரேட் போனசாக பெறலாம். பெட்ரோல், டீசல் இரு மாடல்களுக்கும் தள்ளுபடிகளை பெறும் வாய்ப்பு உள்ளன.

செவர்லே செயில் யுவா
செவர்லே செயில் யுவா காருக்கு ரூ.43,000 வரை தள்ளுபடி சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. ரூ.25,000 பணத் தள்ளுபடியாகவும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.3,000 வரையிலும் பெறலாம். பெட்ரோல், டீசல் என இரு மாடல்களுக்கும் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

ஃபியட் புன்ட்டோ
புதிய ஃபியட் புன்ட்டோ கார் விரைவில் வர இருக்கும் நிலையில், தற்போதைய மாடலுக்கு அதிகபட்ச சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது. வேரியண்ட்டுகளுக்கு தக்கவாறு ரூ.72,000 முதல் ரூ.80,000 வரையில் தள்ளுபடியை பெறும் வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக ரூ.27,000 வரையில் இலவச இன்ஸ்யூரன்ஸ், ரூ.50,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ரூ.3,000 கார்ப்பரேட் போனசாக வழங்கப்படுகிறது.

ஃபோக்ஸ்வேகன் போலோ
ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் ஃபேஸ்லிஃப்ட் வந்துவிட்ட நிலையில், முந்தைய மாடலுக்கு ரூ.55,000 வரையில் விலையில் தள்ளுபடியும், ரூ.20,000 மதிப்புக்கு எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.3,000 மதிப்புடைய கார்ப்பரேட் போனசையும் பெறலாம். ரூ.48,000 முதல் ரூ.78,000 வரையில் சலுகைகளை பெறும் வாய்ப்புள்ளது.

மாருதி வேகன் ஆர்
வாடிக்கையாளர்களின் மனம் விரும்பிய மாருதி வேகன் ஆர் காருக்கு அதிகபட்சமாக ரூ.62,000 வரை தள்ளுபடியாக பெறும் வாய்ப்புள்ளது. பணத்தள்ளுபடியாக ரூ.35,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.25,000 வரையிலும், கார்ப்பரேட் தள்ளுபடியாக ரூ.2,000 வரையிலும் பெறலாம். அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் இந்த சலுகைகள் பொருந்தும்.

செவர்லே பீட்
செவர்லே பீட் காருக்கு அதிகபட்சம் ரூ.53,000 வரை சேமிப்புச் சலுகைகளை பெறலாம்.
பணத் தள்ளுபடி: ரூ.25,000
எக்ஸ்சேஞ்ச் போனஸ்: ரூ.25,000
கார்ப்பரேட் தள்ளுபடி: ரூ.3,000

மாருதி ஆல்ட்டோ 800
மாருதி ஆல்ட்டோ 800 காருக்கு ரூ.57,000 வரை சலுகைகள் பெறலாம்.
பணத் தள்ளுபடி: ரூ.35,000
எக்ஸ்சேஞ்ச் போனஸ்: ரூ.20,000
கார்ப்பரேட் தள்ளுபடி: ரூ.2,000

ஹூண்டாய் இயான்
ஹூண்டாய் இயான் காருக்கு அதிகபட்சமாக ரூ.35,000 வரை தள்ளுபடிகளை பெறலாம்
இலவச இன்ஸ்யூரன்ஸ்: ரூ.11,500
எக்ஸ்சேஞ்ச் போனஸ்: ரூ.20,000
கார்ப்பரேட் தள்ளுபடி: ரூ.3,000

முக்கிய குறிப்பு
இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் சலுகைகள் நகரத்துக்கு நகரம், டீலருக்கு டீலர் மாறுபடும். கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அருகாமையிலுள்ள கார் ஷோரூமை அணுகுங்கள்.


Click it and Unblock the Notifications








