அரசு ஊழியர்களுக்கு சிறப்புச் சேமிப்பு சலுகையை அறிவித்த ஹூண்டாய்!
அரசு ஊழியர்களுக்கு சிறப்பு தள்ளுபடி திட்டத்தை ஹூண்டாய் கார் நிறுவனம் அறிவித்துள்ளது.
பிரைடு ஆஃப் இந்தியா என்ற பெயரில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திட்டத்தின் கீழ் கார் மாடலுக்கு தக்கவாறு ரூ.30,000 வரை சிறப்புத் தள்ளுபடியை அரசு ஊழியர்கள் பெறலாம்.

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றுவோருக்கும் இந்த சிறப்பு சலுகை பொருந்தும்.
கடந்த 14ந் தேதி முதல் இந்த சிறப்பு தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சிறப்புத் தள்ளுபடி திட்டம் குறித்து ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறுகையில்," ஹூண்டாய் குடும்பத்தில் அதிக வாடிக்கையாளர்கள் இணைவதற்கு இந்த திட்டம் சிறப்புமிக்கதாக இருக்கும்.
இந்த சிறப்புத் திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுடடான எங்களது உறவு இன்னும் வலுவடையும்," என்று கூறினார்.


Click it and Unblock the Notifications








