2016ல் முதல் எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தும் ஹூண்டாய்!
பேட்டரியில் இயங்கும் முதல் காரை 2016ம் ஆண்டு அறிமுகம் செய்ய இருப்பதாக ஹூண்டாய் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
தென்கொரியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் கியா பிராண்டில் சோல் என்ற புதிய எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய கார் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய மார்க்கெட்டுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய எலக்ட்ரிக் கார் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய ஹூண்டாய் நிறுவனத்தின் மூத்த அதிகாரி லீ கி சாங்," இப்போது ஹூண்டாய் நிறுவனம் ஹைட்ரஜன் கார் தயாரிப்புக்கும், கியா நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், 2016ல் ஹூண்டாய் பிராண்டிலும் முதல் கார் வெளியிடப்படும். இதேபோன்று, கியா பிராண்டிலும் ஹைட்ரஜன் கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications








