முதல் ஹைபிரிட் காரை தயாரிக்கும் ஹூண்டாய்!
தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் ஹைபிரிட் காரை தயாரித்து வருகிறது. பெட்ரோல் - எலக்ட்ரிக் ஹைபிரிட் மாடலாக வரும் இந்த கார் டொயோட்டா பிரையஸ் காருக்கு போட்டியாக இருக்கும்.
உலக அளவில் பல முக்கிய கார் மார்க்கெட்டுகளின் எமிஷன் விதிகளுக்கு இந்த கார் உட்பட்டதாக இருக்கும். ஆனால், இந்த கார் எப்போது மார்க்கெட்டுக்கு வரும் என்பது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத கார் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இந்த ஹைபிரிட் காரை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
இதுதவிர, ஹைட்ரஜன் மூலம் இயங்கும் ஃப்யூவல் செல் எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும் ஹூண்டாய் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வரும் 2016ம் ஆண்டில் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








